Search This Blog

Nov 3, 2021

குளியல்

 குளியல் 

இதற்கு முன்னுரை தேவையில்லை!

அன்புடன் 

ரமேஷ் 





பாத்திரத்தில் இருந்து பச்சைத் தண்ணீரை 

ஆத்தா அவள்கையால் அள்ளித்ததன்  மகன்தலையில் 

ஊத்துகையில் குளிராலே அவனுடலும் சிலிர்ப்பதையே 

பா(ர்)த்து அவள்முகத்தில் பூத்ததொரு புன்னகையே!



11 comments:

  1. Not just water, your style also is flowing

    ReplyDelete
  2. உள்ளம் குளிர கண்டு இளமை கால நினைவுகளில் மூழ்கி எழுந்தேன்.
    வாளியூடன் அவள் வாளிப்பயும் கண்டு மகிழ்ந்தேன்😋
    மன்னிக்கவும்- கொஞ்சம் கவிஞர் வாலி போல எழுதி விட்டேனோ!?

    ReplyDelete
    Replies
    1. வாளிப்பை நோக்குகிற வயதா உங்களுக்கு?
      வாலிபம் என்ன திரும்பி வருகிறதோ?
      கேலிக்குத் தான்சொன்னேன் என்று கதைக்காதீர்!
      தாளித்து விடுவாளுன் தாரத்திற்குத் தெரிந்தால்!

      Delete
    2. முதுமை தட்டி விட்டது என்பதிர்க்காக வாளிக்கு தகுந்த
      எதுகையை விடமுடியுமா? ஆனாலும்
      மனைவிக்கு தெரிந்தால் வாளேந்தும் காளியாக மாருவாளே!

      Delete
  3. தாய் மனம் குளிர்ந்து புன்னகைக்க கண்ணன் குளிரையும் கொண்டானோ

    (sorry, it is all your influence)

    ReplyDelete
  4. Nicely expressed in just four lines.

    ReplyDelete