Search This Blog

Nov 1, 2021

பிரதோஷப்பாடல்- 42

நாளை பிரதோஷதினம்.

இத்தினத்தன்று, பிரதோஷத்தின் சந்திவேளையில், சிவபெருமானின் முன் வீற்றிருக்கும் நந்திதேவனின் பின் நின்று, அவருடைய இரு கொம்புகளின் இடைவெளி வழியே ஈசனை தரிசனம் செய்தல் சிறந்தது என்பது ஐதீகம்!

இதை விளக்கும் ஒரு பாடலை இன்று மகிழ்ச்சியுடன் பதிக்கிறேன்!

அன்புடன் 

ரமேஷ் 
 







 

இந்தி ரன்முதல் தேவர் அனைவரும் வந்து வணங்குமிச் சந்தியிலே*

நந்தி தேவனின் பிந்தி நின்றவன் கொம்பின் இடைவெளிச் சந்தினிலே

சிந்தும் தண்ணொளிச் சந்திர னைத்தன் சென்னியில்** சூடிய சுந்தரனை

எந்தை ஈசனை வந்து தரிசனம் செய்து தொழுதுநாம்  உய்திடுவோம்


* சந்தியிலே-- சந்திகால வேளையிலே  

** சென்னியில் - சிரத்தில், தலை மீது 

2 comments:

  1. நல்ல பதிவு நன்றி

    ReplyDelete
  2. நந்தி தேவன் காதில் ஓதி நலம் பெற நண்பருக்கு நன்றி சொல்வோம்.

    ReplyDelete