யாணர் கூடல் பாட்டுக்கள் - பகுதி 2
யாணர் என்னும் இணையதளத்தில் அவ்வப்போது என்னுடைய பாடல்களைப் பதிவு செய்கிறேன். சென்ற ஆண்டு அவர்கள் நடத்திய கூடலில் அனைவரும் கொடுக்கப்பட்ட தலைப்புகளில் ஆறு வரிக்கு மேலாகாமல் கவிதைகளை எழுதிப் படிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. அதை ஏற்று , கொடுக்கப்பட்ட தலைப்புகளை ஈற்றடியாக அமைத்து நான் ஐந்து வெண்பாக்களையம் ஓர் விருத்தத்தையும் எழுதினேன்.
அப் பாடல்களை மூன்று தொகுப்புகளாக - ஒரு தொகுப்பில் இரண்டு கவிதைகள் - கனித்தோட்டத்தில் பதிவிடுகிறேன்.
இரண்டாம் தொகுப்பு, இதோ!
அன்புடன்
ரமேஷ்
தலைப்பு - கடைக்கு வராத சரக்கு
நாட்குறிப் பேட்டிலே தீட்டிப் புதைத்தவென்
பாட்டுகள் பற்பல ஆகுமே - வெட்கம்
தடைசெய்த தாலவை இன்னாள் வரையில்
கடைக்கு வராத சரக்கு.
(பல விகற்ப இன்னிசை வெண்பா)
தலைப்பு - கணக்குக்கு வராத பணம்
அஞ்சரைப் பெட்டி அடியில் ஒளித்துவைத்த
அஞ்சாரு ஐநூறு ரூபாய்க ளெல்லாம்
பணமதிப்பு போனவுடன் பாட்டியின் வங்கிக்
கணக்கில் வராத பணம்
{பல விகற்ப இன்னிசை வெண்பா)
கடுகு சிறுத்தாலும் காரம் போகவில்லை.
ReplyDeleteநன்றி, ராம்கி!
Deleteகவிதைகள் அருமை!
ReplyDeleteநன்றி, மணி!
Deleteமுதல் வெண்பாவில் தனிச்சீரின் முதலசை குறிலில் தொடங்கக் கூடாது அது நெடிலில் அமையவேண்டும். இரண்டாவது வெண்பா, நேரிசை வெண்பாகவும் இல்லை, இன்னிசை வெண்பாகவும் இல்லை. அருள்கூர்ந்து சரி செய்க!
ReplyDeleteநான் பாடல்களை எழுதியபின், பாடல்களை, குறிப்பாக வெண்பாக்களை, avalokitam.com என்னும் தளத்தின் மூலம் பரிசோதித்த பின்னர் பதிப்பேன். அவ்வாறு பரிசோதித்ததில் பாடல்கள் இரண்டும் கீழ்க்கண்டவாறு வெண்பா விதிகளுக்கு உட்பட்டுள்ளவையே எனத் தெளிந்தேன்,
Deleteபாடல்- 1 & பாடல்-2
இது ஒழுகிசைச் செப்பல் ஓசை உடைய பல விகற்ப இன்னிசை வெண்பா
description
விளக்கம்
keyboard_arrow_down
ஈற்றடியின் ஈற்றுச்சீரைத் தவிர்த்து ஈரசைச்சீர்களும் காய்ச்சீர்களும் மட்டுமே பயின்று வருதல் வேண்டும் done
வெண்டளைகள் மட்டுமே பயின்று வருதல் வேண்டும் done
ஈற்றடி மூன்று சீர்களும் ஏனைய அடிகள் நான்கு சீர்களும் கொண்டிருத்தல் வேண்டும் done
ஈற்றடியின் ஈற்றுச்சீர் நாள், மலர், காசு, பிறப்பு ஆகியவற்றுள் இருத்தல் வேண்டும் done
நேரிசையாகின் ஒருவிகற்பமோ அல்லது இருவிகற்பமோ கொண்டு எதுகை அமைந்த தனிச்சொல் பெற்று வருதல் வேண்டும். நேரிசை விதிகள் பொருந்தாத அனைத்தும் இன்னிசை ஆகும். info
________________________________________
பாடல் 1-ல் தனிச்சீர் எதுகை அமையாததால் அது இன்னிசை வெண்பாவாக ஆகிறது, ( நாட் , பாட் , வெட்).
நீங்கள் குறிப்பிட்டபடி தனிச்சீர் நெடிலில்தான் தொடங்கவேண்டுமென்ற விதிமுறை எனக்குத் தெரிந்தவரை இல்லை.
கீழ்க்காணும் வெண்பாக்கள் உதாரணம்.
நளவெண்பாப் பாடல்:
மல்லிகையே வெண்சங்கா வண்டூத வான்கருப்பு
வில்லி கணைதெரிந்து மெய்காப்ப- முல்லையெனும்
மென்மாலை தோளசைய மெல்ல நடந்ததே
புன்மாலை அந்திப் பொழுது
பாரதியின் பாட்டு
நமக்குத் தொழில்கவிதை நாட்டிற் குழைத்தல்
இமைப்பொழுதும் சோரா திருத்தல்- உமைக்கினிய
மைந்தன் கணநாதன் நங்குடியை வாழ்விப்பான்
சிந்தையே இம்மூன்றும் செய் .
விளக்கம் தவறாக இருப்பின் உங்கள் கருத்தரிய ஆவலாக உள்ளேன்.