Search This Blog

Nov 5, 2021

தோள்கொடுப்பார் யாருமுண்டோ?

 தோள்கொடுப்பார் யாருமுண்டோ?

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத என் இன்றைய நிலை குறித்து ஒரு சுய இரக்கப் பாடல்!

அன்புடன்

ரமேஷ்




மூளையின் மூலைக்கு  குருதியைக் கொண்டுசெல்லும் 

நாளங்களி லொன்று சற்றே அடைபட்டு  

நோளை*யுற் றெந்தனுடல் நலம்கொஞ்சம்  குன்றியதால் 

நாள்தோறும் நான்விரும்பும் உணவுவகை  உண்ணுதற்கு 

தாள்போட்டு என்வாய்க்கு தடையினையே செய்திட்டார்.

கேள்வியிதைக் கேட்டெனக்குத் தோள்கொடுப்பார் யாருமுண்டோ?


பொரித்தெடுத்த பொருளெதையும் பார்க்கவும் கூடாதாம் 

வறுத்தெடுத்த வையுண்டால் வருத்தம் விளைந்திடுமாம்

முறுமுறுக்கும் நொறுக்குத் தீனிவகை களுடன்கூட 

சருக்கரைத்தின் பண்டங்கள்   துன்பத்தைத் தந்திடுமாம். 

திருநாள் தீபாவளியும் வருவதையே கருதாமல்

ஒருதலையாய் நிருணயித்தென்  நாக்கினையே கட்டிவிட்டார்

இரக்கமற்ற இச்செயலை குரலெடுத்து நானெதிர்த்தால்  

உறவுகளில் யாருமில்லை எடுத்துரைக்க என்பக்கம். 


கேள்வியிதைக் கேட்டெனக்குத் தோள்கொடுப்பார் யாருமுண்டோ?


 * நோளை = பிணியுண்ட நிலை




7 comments:

  1. On seeing the sweets and all watering in mouth. Really pathetic and me too in the same condition. Your explanation with imagination is true and fantastic sir. Parthiban.

    ReplyDelete
  2. A true depictuon of the state all of us are in .

    Since the remaining days are few, y so much control? I just manage to sneak (read: s.t.e.a.l.) a few Mysore Pak's & Badhas!

    ReplyDelete
  3. உங்களுக்கு தோள் கொடுக்க பல தோழர்கள் இருந்தாலும் தோள் கண்டார் தோளே கண்டார் என்று ஒரு வாழ்க்கை துனையாள் கூட இருக்கும் வரை அணுகமுடியுமா எங்களால்? களிப்பூட்டும் இனிய சுவைகளை களைந்து எறிய கூடிய வயதில் உள்ள நாங்கள் அனைவறும் உங்களுக்கு சரி சமமாக தோள் கொடுப்போம்.
    வாழ்க வளமுடன்!

    ReplyDelete
  4. அன்புள்ள நண்பா ரமேஷ்

    நண்பன் நானிருக்கேன். கவலைப்படாதே. உடம்பு தேறியவுடன் எல்லாவற்றுக்கும் சேர்த்து எண்ணையில் பொறித்தவைகளையும் நொறுக்குத்தீனியையும் ஒரு வெட்டு வெட்டுவோம். பொறுமையாக காத்திருப்போம்.

    நொறுக்குத்தீனி நண்பன் ராம்மோகன்

    ReplyDelete
  5. Ha,Ha. What a plight. I can understand your dilema. But as they say when it(r---) is inevitable,you just have to endure it. However I suppose "cheating" once in a while is pardonable.

    ReplyDelete
  6. இனிய நண்பனே,
    தோள் கொடுக்க தோள்கள் நூறு இருப்பினும் , தன் தோள் பலமே தலைச்சிறந்தது . உன்னால் முடியும் நண்பா , காத்திருப்போம் , அந்நன்னாள் விடிந்திட., இன்றும் என்றும் உன்னுடன் வாழ்வினை சுவைத்திட ,

    அன்புடன் MN

    ReplyDelete
  7. முதலில் உன் உடல் நலம் தேற பிரார்த்தனை செய்வோம்.

    ReplyDelete