பிரதோஷப் பாடல் -
நேற்று திங்கட்கிழமை சோமவாரப் பிரதோஷம்.
சனிக்கிழமைகளில் வரும் சனிப்பிரதோஷத்தைப்போல் இதுவும் விசேஷமான ஒன்று.
இந்த நாளில் இறைவனைத் துதித்து நேற்று எழுதத் துவங்கி இன்று முடித்த பாடல் இது.
அன்புடன்
ரமேஷ்
சாமத்திரு வேதம்உரை வேதியர்க்கு அடியோன்
ஈமத்திடு காட்டினிலே சாமநடம் புரிவோன்
வாமத்தொரு பாகத்தினில் பார்வதியை வைத்தோன்
சோமத்திரு வாரப்பிர தோஷத்திந் நாளில்
பூமண்டலத் துயிர்வாழும் பிறவிகள் எல்லாமும்
சேமமுற வாழஅவன் அடிபணிந்து தொழுவோம்.
Nice to see you back in action after a gap
ReplyDeleteThanks, Mohan.
Deleteநல்ல படைப்பு . நன்றி
ReplyDelete🙏🙏🙏
Deleteஅருமையான பாடல்.தேவாரப் பாடல்களை நினைவூட்டுகிறது.
ReplyDeleteநன்றி, ராம்கி!
Deleteதிங்கள்தோரும் இருமுறை தோன்றினாலும் ஆங்கே
ReplyDeleteதிங்கள்கிழமை அன்று மட்டும் தோன்றும்
பிரதோஷம் குறித்து உங்கள் சிவபெருமானின் வர்ணனை என்கள் உள்ளத்தை கவர்ந்தது.நன்றி.
வளமுடன் வாழ்க.