Search This Blog

Sep 29, 2021

யாணர் கூடல் கவிதைகள் - பதிவு 1

யாணர் கூடல் கவிதைகள்  - பதிவு 1

யாணர் என்னும் இணையதளத்தில் அவ்வப்போது என்னுடைய பாடல்களைப் பதிவு செய்கிறேன். சென்ற ஆண்டு அவர்கள் நடத்திய கூடலில் அனைவரும் கொடுக்கப்பட்ட தலைப்புகளில் ஆறு வரிக்கு மேலாகாமல் கவிதைகளை எழுதிப் படிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. அதை  ஏற்று , கொடுக்கப்பட்ட தலைப்புகளை ஈற்றடியாக அமைத்து நான் ஐந்து வெண்பாக்களையும் ஓர் விருத்தத்தையும் எழுதினேன். 

அப் பாடல்களை மூன்று தொகுப்புகளாக - ஒரு தொகுப்பில் இரண்டு கவிதைகள் -   கனித்தோட்டத்தில் பதிவிடுகிறேன். 

முதல் தொகுப்பு, இதோ!

அன்புடன் 

ரமேஷ் 


தலைப்பு  =கண்ணுக்கு வராத கனவு 

கருக்கல் இருட்டு அரைத்தூக்க நேரம் 
உறக்கம் கலையாத வேளை - பிறக்கின்ற  
எண்ணத் திழைகள்  விழித்தால்   மறையுமிது 
கண்ணுக்கு வாராக்  கனவு .
(பல விகற்ப இன்னிசை வெண்பா )

தலைப்பு- கவிதைக்கு வராத வார்த்தை

வார்த்தை விவரிக்க   ஏலாக்    கவிதையுனை 
சேர்கின்ற  நாளென்று நேருமோ- காத்துத்   
தவிக்குமென் தாகம்  தணியும்  வரைநான் 
கவிதையில்  சேராத சொல்
(பல விகற்ப இன்னிசை வெண்பா)
X






8 comments:

  1. கவிதைகள் தலைப்புக்கேற்றவாறு பொருத்தம்.ரத்தினச் சுருக்கம்!பாராட்டிட வார்த்தைகள் மனதில் மையமிடும் வரை,வழிவிட்டு,வழிமேல் விழி வைத்துக் காத்திருப்பேன்!
    அன்புடன்
    நாராயண.மணி

    ReplyDelete
  2. Very nice composition- keeping the given topics as the last line. Really great effort by a talented person 👏👏👍

    ReplyDelete
  3. Great lyrics. The first one especially brilliantly portrays our regular experience! To put in a capsule form shows your mastery of the art.

    ReplyDelete
  4. உமக்கு இரண்டாவது தலைப்பு பொருத்தம் ஆற்றலே!

    ReplyDelete
  5. ஏன் "அற்றதே' என்று போட்டால் ஆற்றலே என்று வந்தது எனக்கு புரியவில்லை.

    ReplyDelete
  6. வெண்பாக்கள் சிறப்பு. அதேபொழுது எனக்கு ஒரு கேள்வியும் இருக்கிறது. முன்னிரு அடிகளும், தனிச்சொல்லும் தமக்குள் எதுகைத் தொடை காட்டி, பின்னிரு அடிகள் வேறு வகையில் தமக்குள் எதுகை நயம் காட்டி வருவது நேரிசை வெண்பா அல்லவா? இங்கே இவற்றை பல்விகற்ப நேரிசை வெண்பா என்று சொல்லவேண்டாமோ? பல்விகற்ப இன்னிசை வெண்பா என்று சொல்கிறீர்களே?

    ReplyDelete
  7. மிக அருமை ரமேஷ்.👌👌

    ReplyDelete