குழந்தைத் தொழிலாளி
காண்போர் மனதை நெகிழச்செய்யும் இப்புகைப்படம் இலக்கியச்சோலை என்னும் தமழிதழில் வெளியிடப்பட்டது. இந்த படத்திற்கு பொருந்தும் வகையில் ஒரு நான்கு வரிக் கவிதை ஒன்றை எழுதி அனுப்பினேன். அதன்பிறகும் இப்படத்தின் தாக்கம் என் மனதை விட்டு அகலவில்லை.
"என்ன காரணத்தால் இந்தப் பெண் இந்த வயதிலியே இக்கொடுமைக்கு ஆளானாள்?" என்று யோசித்து இன்னும் சில வரிகளைச் சேர்த்து இக்கவிதையை நிறைவு செய்ய முயன்றதன் விளைவாக விளைந்த பாடல் இது!
அன்புடன்
ரமேஷ்
செங்கதிரோன் சுடர்க்கதிரால் சுட்டெரிக்கும் வெய்யிலிலே
அங்கையி லேபிடித்த கருங்கற் குழவிகொண்டு
செங்கொல்லன் வடித்த தங்கச் சிலையொத்த
சின்னஞ்சிறு பெண்ணிவளே செங்கல்லைச் சிதைக்கின்றாள்!
கொடுநோய் கொரானாவின் பிடியால் அடிபட்டு
அடைபட்ட பள்ளிகளில் ஒருவேளை சத்துணவும்
கிடைக்காமல் தடைபட்டுப் போனதனால் பசிப்பிணிக்கு
விடைகாண வேண்டியிவள் கல்லுடைக்க வந்தாளோ
பாடுபாட் டுழைத்துத்தன் குடும்பத்தைக் காக்காமல்
குடியென்னும் கொடுமரக்கன் கையுள்ளே கட்டுண்டு
அடிமையாய் அதற்காகி தன்கடமை தனைத்துறந்து
வீடுவிட்டு ஓடிவிட்ட தந்தையினால் இந்நிலையோ
தங்கையொன்றைப் பெற்றடுத்த தாய்க்குப் பதிலிவள்தன்
பங்குக்கு தொழில்செய்து பொருளீட்ட வந்தாளோ?
தாய்தந்தை இருவரையும் நோய்க்குப் பறிகொடுத்து
வாய்க்கரிசி போட்டபின்னே வாழும்வழி தேடினளோ?
செங்கதிரோன் சுடர்க்கதிரால் சுட்டெரிக்கும் வெய்யிலிலே
அங்கையி லேபிடித்த கருங்கற் குழவிகொண்டு
செங்கல்லைச் சிதைக்கின்றாள் சின்னஞ்சிறு பெண்ணிவளே!
இங்கிவளின் துயர்துடைக்க விடையென்று கிடைத்திடுமோ?
Very emotional.
ReplyDeleteVery touching
ReplyDeleteசெங்கல் உடைத்து வறுமயை நீக்க
ReplyDeleteசெங்கதிரவனுடன் போறாடும் குழந்தையை கண்டு
ஆங்கே அந்த கொடுமயை போக்க
செங்கோல் ஆட்சி தான்
எப்போ வந்திடுமோ?
BtW instead of தொழிலாளி (employee)using குழந்தை கூலியாள் (child labour) பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.
👌 👌 👌
DeleteNice Narration . These Happening Must End
ReplyDelete
ReplyDeleteவிடை ஒன்று
'விடையென்று'
கிடைத்திடுமோ? GR
தெரியவில்லையே ஜீ.ஆர்!
DeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteHope it does not refer to the quality of the poem! 😃
DeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteHmmm..sickening
ReplyDeleteHope it does not refer to the quality of the poem! 😃
DeleteVery touching poem !
ReplyDeleteஉங்கள் கவிதையின் தாக்கம் என் மனதைச் சிதைக்கிறது, அந்தச் சிறு பெண் (குழந்தை) உடைக்கும் கல் போல.
ReplyDeleteThanks Ramani
Deleteஎன் மனநிலையும் அவ்வாறே!
ReplyDeleteதங்களுடைய கவிதை கல்நெஞஜரைஐயும்நெகிழவைக்கும்
ReplyDeleteகவிதையைப் படித்து, உணர்ந்து, பாராட்டியதற்கு நன்றி, அனந்த்.
DeleteIt’s a heart rending sight very eloquently brought out by your very touching poem.
ReplyDelete