இதற்கு முன்னுரை தேவை இல்லை!
அன்புடன்
ரமேஷ்
நானும் கூட - மீ டூ (ME TOO)
பொன்னும் மணியும் வீட்டில்
-----பெட்டியில் கொட்டிக் கிடக்க
இன்னமும் கூட வேண்டும்
-----வைரமும் முத்தும் என்று
கன்னமிட் டடுத்த வீட்டை
-----கள்ளமிட நினைத்த பேரின்
எண்ணத்தில் மண்ணைப் போட
-----எழும்புவேன் நானும் கூட!* * Me Too!
கற்றுக் கல்வியில் தேர
-----பள்ளிக்கு வந்தோ ருக்கு
கற்பிப்போர் வடிவில் வந்து
-----சிற்றின்பச் சுவையைக் காட்டும்
குறுஞ்செய்திக் கொத்தை அனுப்பி
-----குற்றச் செயல்கள் புரியும்
அற்பரை அடியோ டழிக்க
-----எழும்புவேன் நானும் கூட!* * Me Too !
Excellent. Shanthi sends her appreciation too and likes the first verse especially. Let’s hope there’s a closure to this case at least, without bringing in the caste.
ReplyDeleteThanks to you and Shanthi!
Deleteரமேஷ்,கயவர்களை தண்டிக்க Mee too
ReplyDeleteஎன்று எழுந்து விட்டீர்கள்.பாராட்டுகி றேன்.என்னையும் உங்களைப் போல Mee too என்று எழ வைத்துள்ளீர்கள்.👍
நன்றி மனோ. காலம் தாழ்த்திய ஏற்புக்கு மன்னிக்கவும்.
ReplyDelete