கொரானா அலைகள்
எனக்கும், நம்மில் பலருக்கும், கொரானவின் முதல் தாக்குதலின் போது இருந்த மனநிலைக்கும், இப்போது வீசும் இரண்டாம் அலையின் தாக்குதலின் போது இருக்கும் மனநிலைக்கும் ஒரு பெரிய வேற்றுமை இருக்கிறது.
இது பற்றி ஒரு பாடல்!
உங்கள் கருத்து? அறிய ஆவலாக இருக்கிறேன்!
அன்புடன்
ரமேஷ்
முதலாம் அலை
முதலாம் அலையும் பலமாய் நம்மேல்
மோதிய போது வீட்டினுள் நாமும்
இதுவும் கடந்து போகும் என்று
பதுங்கி இருந்தோம் பாது காப்புடன் !
நாள்தோ ரும்தொலைக் காட்சிச் செய்திகள்
அள்ளித் தெளிக்கும் அவலக் கதைகளை
உள்ளத் துள்ளே இருத்தா தேயோர்
புள்ளிக் கணக்காய் மட்டும் பார்த்தோம் !
நாமும் நம்மைச் சார்ந்த நண்பரும்
மாமன் மருகன் பிற்பல உறவும்
சேமம் குன்றா திருப்பத னாலே
மாமூ லாய்நம் வாழ்க்கையைத் தொடர்ந்தோம்!
இரண்டாம் அலை
பின்பு வந்தயிவ் விரண்டாம் அலையோ
இன்று போடும்வெறி யாட்டம் தன்னில்
நன்கு பழகிய நண்பர்கள் சிலரும்
நண்பரின் நண்பர் என்பவர் பலரும்
தெரிந்தவர் உறவினர் அக்கம் பக்கம்
இருப்பவர் எனப்பலர் நோய்வாய்ப் பட்டு
எட்டி இருந்த நோய்த்தாக் குதலின்
வட்டம் சுருங்கி கிட்ட வருகையில்
முதலாம் அலையின் முழுவுளக் காட்சி * * perspective
முற்றிலும் மாறி பற்றின்மை* போய் *detachement
மனதினில் நிறையுது பெருங்கழி விரக்கம்* * empathy
மனிதம் மீண்டும் உயிர்த்தது என்னுள்!
V.true
ReplyDeleteIndeed! Thankfully “emotional frigidity” hasn’t engulfed us!
ReplyDeleteThankfully “emotional frigidity” is yet to engulf us!!
ReplyDeletePainful but scary reality
ReplyDeleteHi Ramesh, I completely go with you of the emotions during the first wave.I am also one who thought things have passed by. But on the second wave, honestly i do not feel empathy to most cases because of the total disrespect people show to real situation. Look at the market places, bus terminals, the way people crowed throwing all norms to wind. We have a long way to go on self discipline . All the price we have paid for the second wave will be forgotten if we learn this self discipline.
ReplyDeleteTrue & fact . No one knows when this will end . நல்ல கவிதை . தொடரட்டும் தங்கள் கவிதை.
ReplyDeleteமனிதம் மீண்டும் உயிர்த்தது என்னுள்! உண்மை.
ReplyDeleteஇரண்டாம் அலையை நான் இங்கு சிங்கப்பூரில் பார்க்கிறேன். இரண்டு பேருக்கு மேல் சேர்ந்து ஒன்றாக எங்கும் வெளியே வரக்கூடாது...தக்க காரணமின்றி.என் மகள் தன் மூன்று பிள்ளைகளுடன் எங்களை பார்க்க வர முடியாது.
ReplyDeleteஉங்கள் கவிதை நெஞ்சை கனக்க வைக்கிறது.
The second wave is one brought upon ourselves by being lax and the authorities, not planning a structured way of meeting and beating the same. So we have to blame ourselves as a group. Having said that, the second has definitely been swift in attacking and more devastating and heart rending
ReplyDeleteஅருமை நண்பனே ரமேஷ்
ReplyDeleteஉன் கொரானா அலைகள் நன்று வெளிப்படித்தன உன் தமிழ் கவித்திறைமையை. வாழ்க வளமுடன் வளர்கக உன் தமிழ் கவித்திறைமை. என்றும் அன்புடன், ராம்மோகன்
Very well said and reflects our feelings and helplessness.Let’s hope our fears and worries vanish soon and there’s a bright tomorrow!
ReplyDeleteLet us hope days ahead will be better
ReplyDeleteஎழும்புவேன் நானும் கூட-----
ReplyDeleteஎழும்புவேன் நானும் கூட-----
கவிதையில் சமுதாயத்தின் அவலங்களை
வெளிக்கொணர்ந்தற்கு பாராட்டுக்கள். ஆனால் எப்படி ஒருவன், ஒருத்தியாக,
ஒன்றிணைந்த சமுதாயமாக எழும்பப்போகிறோம்? உணர்ச்சிகள் இல்லாத சமுதாயமாக மாறிக்கொண்டிருக்கோமா?தவறுகள் இழைக்கப்படும்போது சாதி, மதம் தேவையா? வேதனைப்படுகிறேன். GR
கொரோனா கற்று கொடுத்திருக்கும் பாடம்...ஒழுக்கம். மாஸ்க் போட வேண்டும், இடைவெளி கடை பிடிக்க வேண்டும், கைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று பல.இருப்பினும் உங்கள் ஆதங்கம் புரிகிறது.நமக்கு தெரிந்தவர் கொரானாவால் இறக்கும்போது வலி இவை எல்லாவற்றையும் மறந்து மானிடம் தலை தூக்குகிறது.உங்கள் கவிதையின் வெளிப்பாடும் அதுவே.
ReplyDeleteYes Ramesh,some of my close relatives (including my sister) were swallowed by corona.Now I am very unhappy to see the state of affairs.As you said in your poem I emphathise with others.
ReplyDeleteYes,Ramesh, I too emphathise with others as some of my close relatives have been snatched by corona.
ReplyDeleteVery sorry to hear about the loss of your sister, Mano. May her soul rest in peace.
Delete