Search This Blog

May 28, 2021

விதியுடன் செய்த ஒப்பந்தம் - A tryst with destiny

விதியுடன் செய்த ஒப்பந்தம் - A tryst with destiny

நேற்று பாரதத்தின் முதல் பிரதமர் பண்டித  ஜவாஹர்லால் நேரு அவர்களின் நினைவு நாள்.

இந்தியா சுதந்திரம் அடையும் போது அரசியலமைப்புச் சட்டப் பேரவையில்  அவர் ஆற்றிய உணர்ச்சி பொங்கும் உரை மிகவும் புகழ் பெற்றது.

அவரது 57-ஆவது நினைவு நாளன்று அந்தச் சொற்பொழிவின் ஒரு பகுதியின் சாரத்தை  கவிதையாக வடித்திருக்கிறேன்.

அப்பகுதியின் ஆங்கில உரையும் இணைக்கப்பட்டுள்ளது,

இந்தநாளை எனக்கு நினைவுபடுத்தி, இந்தக் கவிதை படைப்பதற்கு ஓர் தூண்டுகோலாக இருந்த நண்பர் எஸ்.தியாகராஜனுக்கு (ST) என் நன்றி! 

அன்புடன் 

ரமேஷ் 


 A TRYST WITH DESTINY  -

Long years ago, we made a tryst with destiny; and now the time comes when we shall redeem our pledge, not wholly or in full measure, but very substantially. At the stroke of the midnight hour, when the world sleeps, India will awake to life and freedom.

A moment comes, which comes but rarely in history, when we step out from the old to the new -- when an age ends, and when the soul of a nation, long suppressed, finds utterance. It is fitting that at this solemn moment we take the pledge of dedication to the service of India, and her people, and to the still larger cause of humanity.

At the dawn of history India started on her unending quest, and trackless centuries which are filled with her striving and the grandeur of her successes and her failures. Through good and ill fortunes alike, she has never lost sight of that quest or forgotten the ideals which gave her strength. We end today a period of ill fortune and India discovers herself again.


விதியுடன் செய்த ஒப்பந்தம் - 

பலநாள் முன்பு பாரத தேசம் 

-----விதியுடன் விதித்ததோர் ஒப்பந்தம்- அவ் 

விலக்கினை நாமும் அடையும் நேரம் 

-----இனிதாய் இன்றே வந்ததுவே!

உலகம் முழுதும் உறங்கும் இரவில் 

-----பாரதம் மட்டும் விழித்திருக்கும் 

விலங்கினை உடைத்து விடுதலை அடைந்து 

-----புதிதாய் சரித்திரம் படைப்பதற்கே!


ஒருயுகம் முடிந்து மறுயுகம் புதிதாய் 

-----விரியும் நேரம் சரித்திரத்தில் 

வருவது அரிதே!அந்நாள் இதுவே! 

-----வருக வென்றதையே  வரவேற்போம்!

உறங்கிக்  கிடந்த நாட்டின் ஆன்மா 

-----மறுபடி மீண்டும் குரலெடுக்கும்!

திறக்கும் புதிய பாதைகள் பலவும் ; 

-----திறமுடன் அவற்றில் பயணிப்போம்.


புனிதம் நிறைந்த இப்புது விடியலில் 

-----இன்றொரு சபதம் செய்திடுவோம்!

இனிவரும் நாட்களில் இந்திய நாட்டின் 

-----நலனை மட்டும் நினைத்திடுவோம்!

சரித்திரம் தொடங்கிய நாள் முதலாக 

-----நடக்கும் நமது தேடுதலை 

நிறுத்தி விடாமல் மீண்டும் தொடர்வோம்! 

-----தடையெவை வரினும்    உடைத்திடுவோம்!

 

7 comments:

  1. Very nice translation. Very apt for current situation!

    ReplyDelete
    Replies
    1. நள்ளிரவில் கிடைத்த சுதந்திரத்தை
      அள்ளி பருகி சுயேச்சயாக இருக்க குருதி கொடுக்க கூட தயார் என்று உறுதி கொள்வோம்.

      Delete
  2. அருமை. பண்டிட் ஜவஹர்லால் பற்றி நினைவு கூர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  3. ரமேஷ்,
    நம் நாட்டு முதல் பிரதமரின் பேச்சு
    புதுணர்வை தருகிறது.அதனை பதிவிட்டதற்கு நன்றி.

    ReplyDelete