Search This Blog

Jun 7, 2021

பிரதோஷப் பாடல் 39

பிரதோஷப் பாடல் - 39

என் நண்பர் என்.கிருஷ்ணமூர்த்தி கவி காளமேகத்தின் ரசிகர். 

அவர் என்னுடன் கீழ்க்கண்ட பாடலைப் பகிர்ந்து கொண்டார்.

கூற்றுவனை வில்மதனை யரக்கர் கோவைக் 
    கூனிலவைக் குஞ்சரத்தை யிஞ்சி மூன்றை 
ஏற்றுலகின் புறவுருவு மாளத் தோள்க 
    ளிரிவெறிப்ப விமையப்பெண் வெருவ வேவக் 
காற்றொழிலா னயனத்தால் விரலால் கற்றைக்  
    கதிர்முடியாற் கரதலத்தாற் கணையாற் பின்னும் 
ஊற்றழிய வுதைத் தெரித்து நெரித்துச் சூடி 
    உரித்தெரித் தானவனென்னை யுடைய கோவே 

இப்பாடல் நிரனிரைப் பொருள்கொள் வகையச் சேர்ந்தது - வார்தைகளை புரட்டிப் போட்டுப் படித்தால்தான் பொருள் விளங்கும்! இருவரின் கூட்டு முயற்சியுடன் அதைச் செய்து முடித்தோம். விளைவு கீழ்வருமாறு -

கூற்றுவனை ஏற்று உலகு இன்புற காற்றொழிலான்  ஊற்றழிய உதைத்து
வில்மதனை  உருவம் மாள நயனத்தால் எரித்து 
அரக்கர் கோவை தோள்கள் இற  விரலால்  நெரித்து
கூன் நிலவைக்  வெறிப்ப கற்றைக் கதிர் முடியால் சூடி 
குஞ்சரத்தை  இமையப் பெண் வெருவ கரதலத்தால்  உரித்து
இஞ்சி மூன்றை  வேவக்  கணையாய் பின்னும் எரித்தான்
அவன் என்னை உடைய கோவே !

இதன் பொருள் :

யமனை எதிர்கொண்டு உலகம் இன்பம் பெறுமாறு தன கால்களின் தொழிலால் இன்னல் தீர உதைத்து 
கரும்புவில் ஏந்திய மன்மதனை அவன் உருவம் மறையுமாறு தன் நெற்றிக் கண்களால் எரித்து
அரக்கர் கோவை தோள்கள் பொடிபட தன் விரலால் நெறித்து 
பிறைச் சந்திரனை அது இருக்கும் இடத்தை வெறுமையாக்கி தன் ஒளிமயமான கற்றைக் குழலில் அணிந்து 
யானையை ஹிமவான் மகள் பார்வதி தேவி அஞ்சும்படி தோலுரித்து
மூன்று கோட்டைகளாகிய திரிபுரத்தை தன் அம்புகளால் தாக்கி பின்னர் எரிக்கவும் செய்தான் 
அவன்தான் என்னை அடிமையாக உடைய சிவபெருமான்.

இந்த காளமேகக் கவிதையை என்னுடைய வார்த்தைகளில், இன்னும் சற்று சுலபமாக, எல்லோருக்கும் புரியும்படி வடித்ததை, இந்தப் பிரதோஷ நாளன்று பதிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்,

அன்புடன் 

ரமேஷ்











 

காலனைக்  காலால் உதைத்தான் - நீலவான் 

நிலவைப் பறித்துத்தன் தலையில் தரித்தான் 

மத்தகத் தோலினை உரித்தான் - மன்மதனை 

நெத்திக் கண்நோக்கின்  நெருப்பால் எரித்தான் 

கழுவீசி முப்புரம் உடைத்தான் - அரக்கர்கோன் 

கழுத்தைத் தன்கைகளின்  விரலால் நெரித்தான்* 

கோலவார் குழலி என்னம்மை உமையோடு 

ஆலவாய் அமர்ந்த சிவனே!

10 comments:

  1. காளமேகத்தின் சிலேடையை உடைத்து சல்லடயில் சலித்து, எங்களுக்கு தெள்ள விளங்குமாக அளித்து,உள்ளத்தயும் கவர்ந்ததிர்க்கு மிக்க நன்றி. வாழ்க வளமுடன்!

    ReplyDelete
  2. மிக எளிமையான பாடல். கவி காளிமேகத்தின் பாடல் விளக்கம் மிக அருமை. பொருள் புரிந்ததால் ரசிக்கமுடிந்தது. நன்றிகள் பல .

    ReplyDelete
  3. திருஞான சம்பந்தரின் பாடல்..
    தென் இலங்கை ட்ரைடன் வரைபற்றி
    யெடுத்தான் முடிதிண்டோள்..
    தன்னிலங்கு விரலால் நெரிவித்திசை
    கேட்டன்றருள் செய்த...
    விரல் என்றவுடன் எனக்கு நினைவுக்கு வந்தது.
    உன் கவிதை காளமேகத்தை புரிந்து கொள்ள முடியாதவர்களுக்கு சிறப்பு சேர்க்கிறது...என்னில் உள் பட.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. ராம்கி, நன்றிகள் பல! னே குறிபிட்டிருக்கும் சம்பந்தரின் பாடலை எனக்கு அனுப்ப முடியுமா?

      Delete
  4. நல்ல விளக்கம் . நன்றி

    ReplyDelete