நேற்றுப் பெய்த மழை
நேற்று இரவு திடீரென்று பெருத்த இடியோசையுடனும், கண்ணைப் பறிக்கும் மின்னலுடலும் கூடிய பெருமழை பெய்யத் தொடங்கி, உறக்கத்திலிருந்து என்னை எழுப்பியது!
கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் இடியோசையும் மின்னலும் அடங்கவில்லை!
அந்தப் பின்னணி இசையுடனேயே மீண்டும் உறங்கிவிட்டேன்!
காலையில் விழித்துப் பார்க்கையில் சற்றே வெளுத்த வானம், சிறு தூறலுடன் என்னை வரவேற்றது!
இது பற்றி ஒரு பாடல்!
அன்புடன்
ரமேஷ்.
நேற்றுப் பெய்த மழை
வகிடெடுத்து வெள்ளிமின்னல் வானைப் பிளக்கும்;
-----வெள்ளிமின்னல் ஒளியினிலே விண்ணும் ஜொலிக்கும்!
முகிலோடு முகிலுரசி மத்தளம் முழங்கும்
-----மத்தளங்கள் முழங்கொலியில் இத்தளம் நடுங்கும்'
முகிற்கூட்டம் மலைமுகட்டில் மோதித்துகி லுரிக்கும்.
-----துகிலுரியும் நேரத்தில் திகில்மழையைக் கக்கும்.
திகிலூட்டும் வகையினிலே பெய்யும்பெரு மழையால்
-----ஆறுகளும் ஏரிகளும் கரையுடைந்து ஓடும்
புகல்தேடி புட்கூட்டம் கூட்டுள் பதுங்கும்
-----விலங்குகளும் விரைந்தோடி மரத்தடியில் ஒதுங்கும்.
அகிலமே அழியுமென் றச்சமுறும் நேரம்
-----வீரியம் குறைந்து மழை தூரலாய் மாறும்
அகழாழி கள்நிரம்பி நீர்மட்டம் உயரும்
-----ஆற்றுவெள்ளம் சற்றடங்கி வாரியில் சேரும்.
சுகமாக அதிகாலைப் பொழுதிங்கு விடியும்
-----சூரியனின் காரியமும் சுறுசுறுப்பாய்த் தொடரும்!
மழை பேய்ந்து ஒய்ந்தாலும் உங்கள் மொழி மடை திறந்தது போல் கொட்டியது. தண்ணீர் காட்டி விட்டீர்களே! அன்புடன் வெங்கட்
ReplyDeleteபலே!பேஷ்!
ReplyDeleteகவித்துவமும் , குறும்பும் கலந்த உங்கள் பாராட்டுக்கு நன்றி.
குறுந்தொகை தெரியாவிட்டாலும் குறிப்பாக குறும்பு பண்ண தெரிகிறதே!
Deleteஇடி மழைக்கு இனிய கவிதை . நன்றி
ReplyDeleteEvery even big and small seems to wake up the poet in you. Congrats Ramesh.
ReplyDelete"event"
ReplyDelete"event"
ReplyDelete👌👋🙌
ReplyDelete
ReplyDeleteரமேஷ்,
உங்கள் கவிதையை படிக்க ஆம்பித்ததும்
நேற்று பெய்த மழை மீண்டும் பொழிய தொடங்கி விட்டது.அழகான கவிதை.👌👌
பாராட்டுகளுக்கு நன்றி, மனோ!
Deleteநானும் கவிதை எழுதலாம் என்று பார்த்தால் இங்கு தினமும் அல்லவா நீங்கள் குறிப்பிட்டது போல் இடியும், மின்னலும், மழையுமல்லவா இருக்கிறது.
ReplyDeleteஆனால் உங்கள் கவிதை திறன் எனக்கு வரும் என்று நம்பிக்கை இல்லை.இங்கு இப்படியே இருந்து விட்டு போகட்டும்.எனக்கு சோதனை வேண்டாம்.
சிங்கப்பூரிலிருந்து...
ரசிக்கத் தெரிந்த எல்லோரும் கவிஞர்களே!
Deleteவாழ்த்துக்கள்.
ReplyDelete