கூகுள் உள்ளீட்டுக்கருவி
எனது பள்ளிக்கால நண்பர்களான ராம்மோகனுக்கும் , ராமசாமிக்கும் என்னுடைய கனித்தோட்டம் பதிவின் வாசகர்கள். அவர்களுக்கு இரண்டு நாட்களுக்கு முன் கூகுள் உள்ளீட்டுக்கருவியை அறிமுகம் செய்த பின் , அவர்கள் தமிழில் ஒருவருக்கொருவர் கருத்துப் பரிமாறிக்கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். இந்தச் செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது.நான் என்னுடைய பதிவை ஆரம்பிப்பதிற்கும் இதுவே உறுதுணையாக இருந்துது எனலாம்!.
வேண்டுவோர் www.google.com/intl/ta/inputtools/try என்ற இணைப்பை முயலவும்.
வாழ்க கூகுள் உள்ளீட்டுக்கருவி !
இதுபற்றி நான் எழுதிய ஒரு சிறு கவிதை.
கூகிள் தமிழ் எழுத்துக் கருவி மூலம் - மெல்லச்
சாகின்ற தமிழெழுத்தை பிழைக்க வைப்போம் - கைகள்
நோகாமல் தமிழ் எழுத உதவும் கூகிள் -அதை
"ஆகா" வெனப் போற்றி வாழ்த் துரைப்போம்.
ரமேஷ் .
No comments:
Post a Comment