பயன் முடிந்ததும் பயணமும் முடியும்!
நாகராஜன் என்னுடைய பால்ய நண்பர். தமிழ் ஆர்வலர். நல்ல சொற்பொழிவாளர். நானும் அவரும் சிறுவயதில் பள்ளிச்சிறுவர்களுக்கான பேச்சுப் போட்டிகளில் கலந்துகொண்ட நினைவுகள் இன்றும் பசுமை!அவர் பிள்ளையாருக்கு வந்த சோகம் பற்றித் தனது ஆதங்கத்தை என்னுடன் பகிரிந்து கொண்டிருக்கிறார்- கீழ்கண்டவாறு,!
quote :
பிள்ளை யாருக்கு வந்த சோகம்
நேற்று விற்காத விலை போகாத மண் பிள்ளையாரை
மாலை நேரத்து மதியின் கீற்றொளியில் கண்டேன்
குப்பை தொட்டியில் ,விநாயகர் !
விர்கபட்டால் தான் அது தெய்வம்.
இல்லையேல் அது களிமண் குவியல்!!
Unquote
அவரது அந்த ஆதங்தக் கவிதையின் தூண்டுதலால் விளைந்த எனது கவிதை இதோ!
விலைபோக முடியாத விநாய கரின்
சிலைஅடையும் முடிவையே கண்டுரைத் தீர்.
விலையாகி பூசையில் அமர்ந்த சிலையும்
அலைகடலில் சிலநாளில் அமிழும் அன்றோ!
எப்பொருளும் அப்பொருளின் பயனும் முடிந்தால்
அப்போதே பொருளதனின் பயணம் முடியும்!
தப்பாத இவ்வுண்மை பொருட்கு மட்டோ?
உப்புண்னும் மாந்தர்க்கும் பொருந்தும் அன்றோ!
அன்புடன்
ரமேஷ் www.kanithottam.blogspot.in
No comments:
Post a Comment