இளவேனில் வாலறிவன்
![]()
இருபத்து பருவத்தாள் மங்கை இளவேனில்
தங்கத்தா ரகையாக மின்னுகிறாள் வானில் அடுப்படியில் இட்லிதோசை சுடுவதையே விட்டு அசத்துகிறாள் அமர்க்களமாய் துப்பாக்கி சுட்டு கடலூரில் பிறந்தஇவள் கடல்தாண்டிச் சென்று ரியோ- டி ஜெனிராவில் வெற்றிகண்டாள் இன்று சிந்துசைனா மேரிகோம் ஹீமாதீ பாபோல் * பலபோட்டிகள் வென்றுஇவள் வளரவேண்டும் மேல்மேல் !
* = Sindhu, Saina, Mary Kom, Hima Das, Deepa Karmaarkar.
|
Search This Blog
Aug 30, 2019
இளவேனில் வாலறிவன்
Aug 29, 2019
இரவில் பெய்த கவிதை மழை
இரவில் பெய்த கவிதை மழை
நான் யாணர் என்ற கவிஞர்கள் அமைப்பில் அங்கத்தினராக இருக்கிறேன்.
பல கவிஞர்கள் இந்த அமைப்பின் whatsapp தளத்தில் கவிதைகளை பதிவு செய்து வருகிறோம்.
ஒருநாள் ஒரு புகைப்படத்தைப் பதித்து, அதுபற்றிய கவிதைகளை எழுதுமாறு வேண்டப்பட்டது.
அன்று நான் படுத்து அடுத்த நாள் எழுமுன் ஒரு கவிதை மழையே பெய்து ஓய்ந்து இருந்தது!
இது பற்றி நான் எழுதிய ஒரு பாடல் !
அன்புடன்
ரமேஷ்
இரவில் தூங்கி காலையில் எழுமுன்
சரசர வெனவோர் கவிதை மழையே!
இருசிறு பறவைகள் தருமரக் கிளையில்
அருகினில் இருக்கும் புகைப்படம் பார்த்து
பிரபு வித்யா தாமரைச் செல்வன்
அருச்சுனன் கபிலன் ராஜ லட்சுமி
முருகு பிரபஸ்ரீ சிதம்பர வடிவு
முரளி தரனும் சுமதியும் எழுதிய
எத்தனை கவிதை? எத்தனை கற்பனை ?
மொத்தமும் மெத்தச் சிறந்தவை யாமே!
பெய்தே ஓய்ந்த கவிமழைக் குளிர்ச்சியில்
தோய்ந்து தேன்சுவை கண்டவண் டானேன் !
கற்பனை விரித்து கவிதைகள் புனைந்த
நற்றமிழ் நாவலர் அனைவர்க்கும் நன்றி!
நான் யாணர் என்ற கவிஞர்கள் அமைப்பில் அங்கத்தினராக இருக்கிறேன்.
பல கவிஞர்கள் இந்த அமைப்பின் whatsapp தளத்தில் கவிதைகளை பதிவு செய்து வருகிறோம்.
ஒருநாள் ஒரு புகைப்படத்தைப் பதித்து, அதுபற்றிய கவிதைகளை எழுதுமாறு வேண்டப்பட்டது.
அன்று நான் படுத்து அடுத்த நாள் எழுமுன் ஒரு கவிதை மழையே பெய்து ஓய்ந்து இருந்தது!
இது பற்றி நான் எழுதிய ஒரு பாடல் !
அன்புடன்
ரமேஷ்
இரவில் தூங்கி காலையில் எழுமுன்
சரசர வெனவோர் கவிதை மழையே!
இருசிறு பறவைகள் தருமரக் கிளையில்
அருகினில் இருக்கும் புகைப்படம் பார்த்து
பிரபு வித்யா தாமரைச் செல்வன்
அருச்சுனன் கபிலன் ராஜ லட்சுமி
முருகு பிரபஸ்ரீ சிதம்பர வடிவு
முரளி தரனும் சுமதியும் எழுதிய
எத்தனை கவிதை? எத்தனை கற்பனை ?
மொத்தமும் மெத்தச் சிறந்தவை யாமே!
பெய்தே ஓய்ந்த கவிமழைக் குளிர்ச்சியில்
தோய்ந்து தேன்சுவை கண்டவண் டானேன் !
கற்பனை விரித்து கவிதைகள் புனைந்த
நற்றமிழ் நாவலர் அனைவர்க்கும் நன்றி!
சிந்து
சிந்து
இந்திய விளையாட்டு வீராங்கனை சிந்து உலக மகளிர் நெட்டிப் பந்து விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்றார்! இந்த சாதனை குறித்து ஒரு லிமரிக் குறும் பாடல்.
அன்புடன்
ரமேஷ்
உலக மகளிர் நெட்டிப் பந்து போட்டி
வென்று அதில் வெற்றிக் கொடி நாட்டி
முத லாக வந்து
சாதித்த சிந்து
நமது பெண்டிர்க் கேயோர் வழி காட்டி !
இந்திய விளையாட்டு வீராங்கனை சிந்து உலக மகளிர் நெட்டிப் பந்து விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்றார்! இந்த சாதனை குறித்து ஒரு லிமரிக் குறும் பாடல்.
அன்புடன்
ரமேஷ்
உலக மகளிர் நெட்டிப் பந்து போட்டி
வென்று அதில் வெற்றிக் கொடி நாட்டி
முத லாக வந்து
சாதித்த சிந்து
நமது பெண்டிர்க் கேயோர் வழி காட்டி !
Aug 28, 2019
பிரதோஷப் பாடல் -- 21
பிரதோஷப் பாடல் -- 21
இன்று ஆகஸ்ட் 28 ம் தேதி - பிரதோஷ தினம்..
இந்த நாளில் சிவனைத் துதித்து ஒரு பாடல்
அன்புடன்
ரமேஷ்
அறுமுகன் என்றும் கரிமுகன் என்றும் இருமகன் கொண்ட திருமகனே!
அரியும் நான்முகனும் அறிய முடியாது பெரிய உருவெடுத்த பெருமானே!
நரியைப் பரியாக்கி பரியை நரியாக்கி திருவிளை யாடல்கள் புரிந்தவனே!
தெரிந்தும் தெரியாது அறிந்தும் அறியாது புரிந்த பிழைபொறுத்து அருள்வாயே!
(எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
Aug 25, 2019
சந்திராயன்
சந்திராயன்
இந்தியா அண்மையில் செலுத்திய சந்திராயன் - 2 விண்கலம் , இப்போது வெற்றிகரமாக நிலவின் ஈர்ப்பு மண்டலத்தில் சென்று அதைச் சுற்றி வருகிறது.
இன்னும் சில நாட்களில் அது நிலவின் மீது இறங்கி தன் சுவடுகளைப் பதிக்கும் !
அது பற்றி ஒரு லிமெரிக் கவிதை!
அன்புடன்
ரமேஷ்
வான்வெளியில் இந்தியாவின் விண் கலம்
வருகுதின்று சந்திரனை அது வலம்
----------இன்னும் சில நாள்தான்;
----------பதியும் அதன் கால்தான்;
புனிதமாகும் அப்போ நிலவின் நிலம் !
இந்தியா அண்மையில் செலுத்திய சந்திராயன் - 2 விண்கலம் , இப்போது வெற்றிகரமாக நிலவின் ஈர்ப்பு மண்டலத்தில் சென்று அதைச் சுற்றி வருகிறது.
இன்னும் சில நாட்களில் அது நிலவின் மீது இறங்கி தன் சுவடுகளைப் பதிக்கும் !
அது பற்றி ஒரு லிமெரிக் கவிதை!
அன்புடன்
ரமேஷ்
வான்வெளியில் இந்தியாவின் விண் கலம்
வருகுதின்று சந்திரனை அது வலம்
----------இன்னும் சில நாள்தான்;
----------பதியும் அதன் கால்தான்;
புனிதமாகும் அப்போ நிலவின் நிலம் !
Aug 22, 2019
மாஜி நிதி மந்திரி சிதம்பரம் கைது
மாஜி நிதி மந்திரி சிதம்பரம் கைது
ரமேஷ்
மாஜிநிதி மந்திரி சிதம் பரம்
அவரோட ஊழல்கள் அம் பலம்
கிடைக்க வில்லை பெயிலு **
அவர் போனாரு ஜெயிலு#
அவர் தங்கமா? இல்லை! உதும்பரம்*
உதும்பரம் = செப்பு ( copper )
** Bail
# Jail
மத்திய அரசவையில் நிதி மந்திரி, உள்நாட்டு மந்திரி ஆகிய முக்கிய பொறுப்புகளை வகித்து வந்தவரும் , தமிழ்நாடு காங்கிரேசின் முக்கியத் தலைவரும் ஆன திரு. சிதம்பரம் ஊழல் குற்றங்களுக்காக இன்று கைது செய்யப்பட்டார் .
இவர் மூலம் "வேட்டி கட்டிய தமிழன் ஒருவன் நாட்டின் பிரதம மந்திரியாக வரவும் வாய்ப்பு உண்டு" என்று பலராலும் கணிக்கப்பட்டவர் இவர் !
எத்தகைய ஒரு வீழ்ச்சி!
இது பற்றி லிமெரிக் வடிவில் ஒரு பாடல் !
அன்புடன்
ரமேஷ்
மாஜிநிதி மந்திரி சிதம் பரம்
அவரோட ஊழல்கள் அம் பலம்
கிடைக்க வில்லை பெயிலு **
அவர் போனாரு ஜெயிலு#
அவர் தங்கமா? இல்லை! உதும்பரம்*
உதும்பரம் = செப்பு ( copper )
** Bail
# Jail
Aug 21, 2019
அரசியல் சாசனம் - பிரிவு 370
அரசியல் சாசனம் - பிரிவு 370
காஷ்மீர் மாநிலத்திற்கு விசேட சலுகைகளை அளிக்கும் ,இந்திய அரசியலமைப்பின் 370 வைத்த-ஆவது பிரிவை ரத்து செய்தது பற்றி பொதுவாக நாடு முழுவதும் - காஷ்மீரைத் தவிர-வரவேற்பு இருப்பதாகவே தெரிகிறது.
இது வெகு நாட்களுக்கு முன்பே எடுத்திருக்க வேண்டிய முடிவே என்றும் முந்தைய அரசுகளின் மெத்தனமான போக்கினால் இந்த தற்காலிக உரிமை க்ஷரத்து காஷ்மீர் மக்களின் மனதில் வேறூன்றிவிட்டதால் , இப்போதைய நடவடிக்கையின் விளைவு சில பிரச்னைகளை விளைவிக்கும் என்றும் அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பாப்போம்!
இது பற்றி ஒரு கவிதை - லிமெரிக் வடிவில் !
அன்புடன்
ரமேஷ்
இந்தியாவின் அரசியல் சட்டப் பிரிவு
முன்னூற்றி எழுவதாம் நம்பர் தெரிவு
--------------------ரொம்ப நாளு கழிச்சு
--------------------போட் டாங்க கிழிச்சு
கவர்மெண்டுக்கு இப்பத்தான் வந்தது அறிவு!
Subscribe to:
Posts (Atom)