இரவில் பெய்த கவிதை மழை
நான் யாணர் என்ற கவிஞர்கள் அமைப்பில் அங்கத்தினராக இருக்கிறேன்.
பல கவிஞர்கள் இந்த அமைப்பின் whatsapp தளத்தில் கவிதைகளை பதிவு செய்து வருகிறோம்.
ஒருநாள் ஒரு புகைப்படத்தைப் பதித்து, அதுபற்றிய கவிதைகளை எழுதுமாறு வேண்டப்பட்டது.
அன்று நான் படுத்து அடுத்த நாள் எழுமுன் ஒரு கவிதை மழையே பெய்து ஓய்ந்து இருந்தது!
இது பற்றி நான் எழுதிய ஒரு பாடல் !
அன்புடன்
ரமேஷ்
இரவில் தூங்கி காலையில் எழுமுன்
சரசர வெனவோர் கவிதை மழையே!
இருசிறு பறவைகள் தருமரக் கிளையில்
அருகினில் இருக்கும் புகைப்படம் பார்த்து
பிரபு வித்யா தாமரைச் செல்வன்
அருச்சுனன் கபிலன் ராஜ லட்சுமி
முருகு பிரபஸ்ரீ சிதம்பர வடிவு
முரளி தரனும் சுமதியும் எழுதிய
எத்தனை கவிதை? எத்தனை கற்பனை ?
மொத்தமும் மெத்தச் சிறந்தவை யாமே!
பெய்தே ஓய்ந்த கவிமழைக் குளிர்ச்சியில்
தோய்ந்து தேன்சுவை கண்டவண் டானேன் !
கற்பனை விரித்து கவிதைகள் புனைந்த
நற்றமிழ் நாவலர் அனைவர்க்கும் நன்றி!

No comments:
Post a Comment