பிரதோஷப் பாடல் -- 21
இன்று ஆகஸ்ட் 28 ம் தேதி - பிரதோஷ தினம்..
இந்த நாளில் சிவனைத் துதித்து ஒரு பாடல்
அன்புடன்
ரமேஷ்
அறுமுகன் என்றும் கரிமுகன் என்றும் இருமகன் கொண்ட திருமகனே!
அரியும் நான்முகனும் அறிய முடியாது பெரிய உருவெடுத்த பெருமானே!
நரியைப் பரியாக்கி பரியை நரியாக்கி திருவிளை யாடல்கள் புரிந்தவனே!
தெரிந்தும் தெரியாது அறிந்தும் அறியாது புரிந்த பிழைபொறுத்து அருள்வாயே!
(எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
Excellent
ReplyDelete