நாளுமோர் நற்கவிதை
என் கல்லூரி நண்பர்கள்பலரும் இணைந்துள்ள வாட்ஸஅப் தளத்தில் நண்பர் வேலாயுதம் தினந்தோறும் ஒரு கவிதை எழுதி பதித்து மகிழ்வித்து வருகிறார்! அன்னாரின் திறமையை வியந்துப் போற்றி ஒரு பாடல் - வெண்பா வடிவில்!
அன்புடன்
ரமேஷ்
மடையுடைத்துப் பாய்கின்ற வெள்ளம்போல் - தங்கு
தடையின்றி வீசுகின்ற தென்றல்போல் - நாளும்
இடைவெளிகள் இல்லாமல் பாடல் புனைந்தளிக்கும்
சொல்வேலை நான்போற்று வேன்.
(பலவிகற்ப இன்னிசை வெண்பா)
No comments:
Post a Comment