Search This Blog

Jan 27, 2025

பிரதோஷப் பாடல் - 50

பிரதோஷப் பாடல் - 50 

இன்றைய பிரதோஷத்தன்று நாகலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்கையில் எண்ணத்தில் எழுந்த பாடல்.

இந்த ஐம்பதாவது பாடலுடன்,  இதுவரை எழுதி வந்த பிரதோஷப் பாடல் தொடரை நிறைவு செய்கிறேன்.

அன்புடன் 

ரமேஷ் 



அகரஉகர மகரங்கள் ஒன்றிணைந்த ஓமினை 

சிகரமாகச் சேர்த்துச் சொல்லும் ஐந்தெழுத்து மந்திரம்  *

பகருவோர்க்கு பலமுறை பலனளிக்கும் மந்திரம் 

நகரவேண்டி நந்தியை நந்தன் சொன்ன மந்திரம் 

சிதம்பரத்தில் நடனமாடும் திகம்பரனைத் துதித்திடும்  

நிகரில்லாத மந்திரம் நமச்சிவாய மந்திரம் 

உகந்து நாளும் காலை மாலை வேளைதொறும் ஓதுவர் 

இகபர மிருவுலகிலும் இன்பமாக வாழுவர்!


* ஓம் நமசிவாய  

14 comments:

  1. Fine. இக பர மிருவுலகிலும் super.

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு மிக்க நன்றி!

      Delete
  2. எல்லாமே சிவமயம் என்பதை அருமையாக புரியவைத்தீர். ஓம் நமசிவாய. 🙏🏼🙏🏼

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு மிக்க நன்றி!

      Delete
  3. ப்ரதோஷ பாடலை கேட்டு மிக்க
    சந்தோஷம், க்ரஹ தோஷமும் விலகியது!

    ReplyDelete
    Replies
    1. ஈரோடுக்கு போய் இருப்பதால் க்ரஹதோஷம் விலகியது என்று கூறுவது சற்றும் சரியில்லை!

      Delete
    2. உமக்கு என்கிற வார்த்தை விட்டு போய் விட்டது!

      Delete
  4. சிவார்ப்பணம்!

    ReplyDelete
  5. முடிவுக்கு வருவது சற்றே வருத்தம்.

    ReplyDelete
    Replies
    1. இறைவன் அருள் இருந்தால் தொடராலாம். எல்லாம் அவன் செயல்!

      Delete
  6. Excellent as usual. Even though you say that tis series has come to an end, we look forward to further poetry in your fluent style - SUNDER

    ReplyDelete
  7. Nice one ☝️

    ReplyDelete