என்னுள் இருந்த சின்னக் குழந்தையை எங்கோ தொலைத்து விட்டேன்-
உன்னுள் இருக்கும் குழந்தையை நீயும் இழந்து விடாதே நண்பா!
சின்னச் சின்ன குறும்புகள் செய்து மகிழ்ந்ததை மறந்து விட்டேன்
வன்மம் நில்லா வெள்ளை மனதை வெளியே துறந்து விட்டேன்
துள்ளல் சிரிப்பை உள்ளக் களிப்பை என்றோ துறத்தி விட்டேன்
கள்ளம் கபடம் இல்லா உள்ளம் எங்கோ விரட்டி விட்டேன்
என்னுள் இருந்த சின்னக் குழந்தையை எங்கோ தொலைத்து விட்டேன்-
உன்னுள் இருக்கும் குழந்தையை நீயும் இழந்து விடாதே நண்பா!
விழுந்து காயம் பட்ட இடத்தில் அப்பா முத்தம் இட்டால்
விலகிடும் வலிகள் என்று நம்பிய அப்பா வித்தன உறுதி !
புத்த கத்தில் பத்திர மாக பதுக்கி வைத்த மயிலிறகு
சத்தியமாக போடும் மறுநாள் குட்டி என்ற நம்பிக்கை!
இத்தகு உறுதியும் நம்பிக் கைகளும் இருந்த வெள்ளை மனதை
என்னுள் இருந்த சின்னக் குழந்தையை எங்கோ தொலைத்து விட்டேன்-
உன்னுள் இருக்கும் குழந்தையை நீயும் இழந்து விடாதே நண்பா!
ஏமாற் றங்கள் ஏற்பட் டாலும் அதையே மனதில் நிறுத்தி
ஏமா ராமல்* உடனே அடுத்த அனுபவம் தேடும் குணங்கள்
சூழ்ச்சி களங்கம் குற்றம் இவைகள் எதுவும் இல்லா மனது
தாழ்த்துதல் உயர்த்துதல் காழ்ப்புகள் இனப்பிற குணமெதும் சேராப் பண்பு
வாழ்க்கையின் உயரிய இத்தகு முறைமைகள் நிறைந்து இருந்த மனதை
என்னுள் இருந்த சின்னக் குழந்தையை எங்கோ தொலைத்து விட்டேன்-
உன்னுள் இருக்கும் குழந்தையை நீயும் இழந்து விடாதே நண்பா!
வண்ணப் பூச்சிகள் பறப்பதைப் பார்த்து சிரித்து மகிழ்ந்த காலம்
விண்ணில் மின்னும் விண்மீன்களை எண்ணி வியந்த நேரம்
நண்பர் களுடன் நேரம் தெரியாமல் பேசிக் கழித்த பருவம்
கொண்டாட் டங்கட்கு குறைவில் லாமல் குதித்துக் களித்த காலம்
இவைகளை நினைவில் நிறுத்திச் சிரித்துக் களித்த காலம் கடந்து
கவலைகள் மட்டும் ஏனோ மனதில் நிலைகொண் டிருக்குமிந் நேரம்
எல்லாம் இருந்த போதும் எதுவோ குறைந்ததைப் போல் தோன்றும்
எதுவும் புரியா தேனெனத் தெரியா நெஞ்சை நெருடிடும் பாரம்
என்னுள் இருந்த சின்னக் குழந்தையை எங்கோ தொலைத்து விட்டேன்-
உன்னுள் இருக்கும் குழந்தையை நீயும் இழந்து விடாதே நண்பா!
முன்தினம் நடந்து முடிந்த ஒன்றை மனதில் இருத்தி வருந்தி
நாளையப் பொழுதின் நடப்புகள் நினைத்து கவலையில் மூழ்கிக் கழித்து
நாளின் றிதையே நன்றாய் கழிப்பதை நானே மறந்து விட்டேன்.
என்னுள் இருந்த சின்னக் குழந்தையை எங்கோ தொலைத்து விட்டேன்-
உன்னுள் இருக்கும் குழந்தையை நீயும் இழந்து விடாதே நண்பா!
என்னுள் எங்கோ புதைந்து கிடைக்கும் சின்னக் குழந்தை மனதை
இன்றே தேடி எடுத்து அதனை மீண்டும் மீட்டு வருவேன்
எங்கும் இன்பம் எதிலும் இன்பம் காணும் அந்த மனதை
தங்கல்** தவிர்த்து எந்தன் மனதில் இன்றே உயிர்க்க வைப்பேன்.
* ஏமாராமல் = மனம் கலங்காமல்
**தங்கல்=தாமதித்தல்
Nice . Interesting
ReplyDeleteBeautiful ! The poem brings all our childhood memory alive!
ReplyDeleteNice one.
ReplyDeleteExcellent, as usual. Thanks for taking me to my youthful days - Sunder
ReplyDeleteஅரிய குழந்தைப் பருவத்தின் innocent mind (இணையான தமிழ் வார்த்தை தெரியவில்லை) பற்றிய அழகான கவிதை. என்ன முயன்றாலும் பிற்காலத்தில் கிடைப்பது அரிது. அந்த ஆதங்கத்தை கவிதை மூலம் வெளிப்படுத்துகிறார் கவிஞர்
ReplyDeleteAzhagu, arumai, thelivu. Nandri nanba.
ReplyDeleteசிறு சிறு செயலையும் நினைத்து நினைத்து கொணர்ந்தமைக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteIt has come out of heart...and not written for salary...super
ReplyDelete