பிறவித் துறத்தல்
விண்ணும் மண்ணும் ஒன்றை யொன்று நின்று சேரும் கோட்டினை
என்றும் நாம் நடந்து சென்று அடைய முடிவ தில்லைபோல்
என்னுளே யேயுள்ள னென்று எவரும் கூறும் இறைவனை
'சின்ன தூரம்' ஆயினும் அடைய முடிவ தில்லையே!
கண்ணை மூடி காதை மூடி கால்மடக்கி அமர்ந்தபின்
எண்கணக்கில் எண்ணி மூச்சை இழுத்தடக்கி விடுகையில்
எண்ணம் பலவும் எந்தன் உள்ளே வந்து வந்து போவதால்
என்கணக்கில் இறைவன் ஏட்டில் புண்ணியங்கள் ஏறுமோ?
வந்து போன நாட்க ளில் செஞ்ச பாவ புண்ணியம்
இன்னும் மீதி நாட்களில் செய்யப் போகும் காரியம்
முந்தை யப்பல பிறவியில் முடிந்து வைத்த மிச்சமும்
இந்த யாவும் இணைந்ததே இப் பிறவியின் அப்புறம்
ஜன்ம ஜன்ம மாய்த் தொடர்ந்து இன்னும் வருமிப் பின்னலில்
இன்ப துன்பம் மீண்டும் மீண்டும் முடிவில் லாமல் வருவதை
நின்று போகச் செய்திடும் நல்வழி யொன் றுண்டெனின்
என்னுள் உள்ள இறைவனை யான் கண்டு கொண் டுணர்வதே
ஏட்டில் இந்த உண்மையை மீட்டும் மீட்டும்* படிக்கிறேன்
பாட்டில் இந்த உண்மையை எழுதி ஏட்டில் பதிக்கிறேன்
சேட்டை செய்யும் மனதி லிந்த உண்மை என்று ஒட்டுமோ
நாட்கள் பலவும் நீளுமுன் தேட்டம்** தீர்ந்து தெளியுமோ
*மீட்டும்=மீண்டும்
**தேட்டம் = தேடுதல்
அன்புடன்
ரமேஷ்
கவிதையில் வாழ்வின் தத்துவம் மிளிர்வது அருமையிலும் அருமை!
ReplyDeleteமிக்க நன்றி! உங்கள் பதிவில் உங்கள் பெயரையும் குறிப்பிட்டால் நன்றாக இருக்குமே!
Deleteஅருமையான கவிதை
ReplyDeleteமிக்க நன்றி! உங்கள் பதிவில் உங்கள் பெயரையும் குறிப்பிட்டால் நன்றாக இருக்குமே!
Deleteதேட்டம் தீர்வதற்கு ஒன்றே வழி
ReplyDeleteரமணர் கூறிய அத் தனி வழி
உள்ளே வெளியே என்று பாராது
என்றும் நிற்பாய் அவர் கூறியவாறு.
“தானாய் இருத்தலே தன்னை அறிதல்”
என்றவர் எண்ணங்களைத் தொடராது
நின்றோ நடந்தோ அமர்ந்தோ எவ்வாறோ
கிளம்பும் எண்ணத்தைக் கவனி என்றார்.
கண் மூடுவதோ கால் மடிப்பதோ வேண்டா
எழும் எண்ணத்தை விரித்துத் தொடராது
கூர்ந்து கவனிக்க அலை போல் எண்ணம்
மடியும் இன்றல்ல ஒருநாள் எனபார்.
எண்ணங்களின் தொகுப்பே மனம் ஆவதால்
எண்ணம் மடிய மனம் ஒழியும் அது ஒழிய
நிற்பதே நான்; அன்றறிவாய் நீ யாரெனவே
இன்றும் நீ அதே; உணராதுள்ளாய்!
ஆகா! அருமை! "எண்ணம் மடிய மனம் ஒழியும் அது ஒழிய
Deleteநிற்பதே நான்; அன்றறிவாய் நீ யாரெனவே ". கடைப்பிடிக்க முயலுவேன்!
நல்லது; கடைசி வரி பற்றி எண்ணம் என்ன?
DeleteNice .
ReplyDeleteமிக்க நன்றி! உங்கள் பதிவில் உங்கள் பெயரையும் குறிப்பிட்டால் நன்றாக இருக்குமே!
Deleteஆன்மீக சிந்தனையை இவ்வளவு அழகாக கவிதை வடிவில் தந்த உமது கற்பனை தரம் மெச்ச தகுந்தது.
ReplyDeleteமிக்க நன்றி! உங்கள் பதிவில் உங்கள் பெயரையும் குறிப்பிட்டால் நன்றாக இருக்குமே!
DeleteExcellent thoughts! Bala
ReplyDeleteThanks, Bala!
ReplyDelete