இன்று சூரசம்ஹாரம்!
இந்த தினத்தன்று முருகனை "எண்ணி" , இரண்டு வருடங்களுக்கு முன்னால் நான் எழுதி பதித்த இப் பாடலை, மீண்டும் பதிக்கிறேன்,
அன்புடன்
ரமேஷ்.
முருகனை "எண்ணு"வோம்.!
ஓரிரண்டு# தேவியராய் வள்ளிதே வானையை #1*2
தாரமாய் மணங்கொண்ட தார்மார்பினன்
ஈரிரண்டு# நால்வேதத் துட்பொருளை உணர்ந்தபின் #2*2
பிரணவத்தை ஈசர்க்கு போதித்தவன்
மூவிரண்^ டாறான முறுவல் முகங்களுடன் ^ 3*2
சேவிக்கும் அடியார்க் கருள்செய்பவன்.
நாலிரண்டு^ எண்திக்கும் அரக்கரை அழித்திடவே ^ 4*2
வேலெடுத்து போர்தொடுத்து வென்றிட்டவன்.
ஐயிரண்டு^ அவதாரம் எடுத்துலகைக் காத்திடும் ^5*2
மைவண்ணன் திருமாலின் மருகனவனே!
ஆறிரண்டு^ பன்னிரண்டு தோள்களுடை முருகனுக்கு ^ 6*2
வேறுஒரு தெய்வமும் நிகராகுமோ?
ஏழிரண்டு^ பதினான்கு இரவுகள் வளர்ந்திட்ட ^ 7*2
முழுமதியைப் பழித்திடும் வதனத்தினன்.
எட்டிரண்டு^ பதினாறு செல்வமும் சிறப்புடன் ^ 8*2
கிட்டிடும் குமரனைத் துதிப்பவர்க்கே.
.
சித்தர்க ளீரொன்ப தில்^மூத்த அகத்தியர்க்கு ^ 9*2
சத்தான முத்தமிழைப் போதித்தவன்.
எண்கணக்கி லொன்றுமுதல் பத்துவரை யும்எழுதி
பண்புனைந் துன்புகழ் பாடினேனே!
என்கணக்கு இப்பிறவி. யில்முடியு முன்னமே
எனையாண்டு அருள்புரிவாய் குமரவேளே!
Excellent. Reminds of KB sundarambal song onranavan .
ReplyDeleteThanks, Madhu!
Deleteகடவுள் முருகன் புகழ் பாடும் கவிதை எதுகை மோனையுடன் எண்கள் விளையாட்டிலே, அருமையிலும் அருமை!தூய தமிழ் பயின்றவர்க்கும் இணையாக அருமையான கவிதை படைக்கும் திறன் முருகனின் அருள் காரணம் என்றும் கொள்வோமே!அன்பும் வாழும் வழங்குவது எங்கள் பணி 🙏🏽
ReplyDeleteமிக்க நன்றி, திரு.Anonymus! உங்கள் பதிவில் உங்கள் பெயரையும் குறிப்பிட்டால் நன்றாக இருக்குமே!
Deleteசுவாமிநாதனை நாவில் கொண்டுள்ள நீவிர் வாழ்வீர் வளமுடன் என் வாழ்த்துகிறேன்.
ReplyDeleteமிக்க நன்றி. உங்கள் பதிவில் உங்கள் பெயரையும் குறிப்பிட்டால் நன்றாக இருக்குமே!
ReplyDelete