வலிகள்
சில நாட்களாக சயேடிகா (scicatica) என்னும் நரம்பு வலியால் பாதிக்கப்பட்டு கட்டாய ஓய்வில் இருக்கும் போது எழுதிய பாடல்! வலிகள் அளித்த ஒரு வெகுமதி!
அன்புடன்
ரமேஷ்
வலிகள்
இரவின் மடியில் இருளின் பிடியில்
இரண்டாய் பெருகும் உடல் வலிகள்
முதுகில் தொடங்கி முட்டியின் வழியே
கணுக்கால் அடையும் வலித் துளிகள்
நிலத்தின் மேலே பலமாய்க் காலை
ஊன்றி நடக்க விடா வலிகள்
பலவகை மருந்துகள் தினமும் விழுங்கியும்
விலகா திருக்கும் கால் வலிகள்
நரகம் இன்று இங்கு வந்ததென
நம்ப வைத்திடும் நீள் வலிகள்
வலிகள் பலநாள் அகலா ததனால்
அதையே விதையாய் விதைத் ததனின்
விளைவாய் மனதில் முளைத்த கருத்தை
எழுத்தாய் எழுதிய இக் கவிதை
ஒலிமொழி வழியே உனைவந் தடையுமுன்
வலிகள் எனைவிட் டோடிடுமோ? - இ(ல்)லை
இன்னும் பலநாள் தொடர்ந்தே எந்தன்
வாழ்க்கையின் நிறத்தை மாற்றிடுமோ?
Super one and the details given in the poem is real and the fact
ReplyDeleteR.Ramachandran
Super hit kavidhai, valyil ezhuthinalum , sherfuddeen sheikh
ReplyDeleteமனதை உருக்கும் வரிகள். அனுபவித்தோருக்குத்தான் தெரியும் அவை அனைத்தும் உண்மையென.
ReplyDeleteவலிகள் நீங்கி வாழ்வு சிறக்க வாழ்த்துகள்.
ReplyDeleteWell written Ramesh. Wishing you quick relief from your siatica pain. ST
ReplyDeleteவலி நீங்கி நலம் பெற பிரார்த்தனை🙏
ReplyDeleteவலியுடன் நல்ல கவிதை . வலி நீங்கி நலமுடன் வாழ வாழ்த்துக்கள்
ReplyDeleteGet well soon. வலி நீங்கிய கவிதை ஒன்று விரைவில் எதிர் பார்க்கிறோம். (சிவா)
ReplyDeleteHope you are feeling better now
ReplyDeleteWishing you speedy recovery.
ReplyDelete