Search This Blog

Sep 25, 2024

சதுரங்க வேட்டை

சதுரங்க வேட்டை 

புடாபெஸ்ட்  நகரில் உலக நாடுகளுக்கிடையே நடைபெற்ற சதுரங்க ஒலிம்பிக்  போட்டிகளில் ஆண்களுக்கான பிரிவு, பெண்களுக்கான பிரிவு இரண்டிலும் இந்திய அணிகள் முதலிடத்தைப் பெற்று தங்கக்  கோப்பைகளைப் பெற்றனர்!

ஆண்கள் அணி,  ஆடிய பதினோரு ஆட்டங்களில் பத்து ஆட்டங்களை வென்றது; ஒரு ஆட்டம் வெற்றி-தோல்வி இன்றி சம நிலையில் முடிந்தது. மொத்தம் 21 புள்ளிகளை எடுத்து கோப்பையை வென்றது.

பெண்கள் அணி பதினோரு ஆட்டங்களில், ஒன்பது  ஆட்டங்களை வென்றது; ஒன்றில் தோற்றது: மற்றொன்று வெற்றி-தோல்வி இன்றி சம நிலையில் முடிந்தது. மொத்தப் புள்ளிகள் 19 ஐ எடுத்து கோப்பையை வென்றது.

ஒரே நாட்டைச் சேர்ந்த இரு அணிகளும் ஒரே நேரத்தில் இந்தக் கோப்பைகளைத் தட்டிச் சென்றது ஒரு மிகப் பெரிய சாதனை. 

இதனுடன் கூட, இரு அணியைச் சேர்ந்த சில விளையாட்டு வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் தனிப் பரிசாக தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.

இந்த சாதனையைப் பாராட்டும் முகமாக ஒரு பாடல்.

அன்புடன் 

ரமேஷ் 






சதுரங்க வேட்டையில் ஆண்கள் அணி    போட்டி 

பதறாமல் ஆடித்  தம் திறமையைக் காட்டி 

"பதினொன்றில் பத்து"என வெற்றியை ஈட்டி 

வென்றாரை  வரவேற்போம் மலர்மாலை சூட்டி.




ஆண்கட்கு  பெண்கள் சளைத்தவர் இல்லை  - இதைக் 

காண்பிப்போம்  எம்திறமைக் கிங்கேது  எல்லை - என  

அறைகூவி  வென்றார்   தங்கத்தில் வில்லை*   

பறைசாற்றி னார்இன்று மங்கையர்  மல்லை**    


* வில்லை = பதக்கம், badge 
**மல்லை = பெருமை, greatness   

 






 

4 comments:

  1. அங்கத்தில் குறைந்தோர் பாரிஸில் அள்ளினர் தங்கம்
    அடுத்து வந்தவர் அள்ளியதோ சதுர் அங்கத்திலே
    சங்கம் அமைத்தனரோ ஆண்களும் பெண்களும்
    சேர்ந்து குவித்தோர் யாவரும் சொக்கத் தங்கங்களே!

    ReplyDelete
  2. Very nice. Congratulations to both the teams for this well deserving victory. Credit should go to Vishy for raising the level of chess in India.

    ReplyDelete