Search This Blog

Oct 2, 2024

நீத்தார் நினைவு

நீத்தார் நினைவு 

இன்று மாளய அமாவாசை.  எல்லா அமாவாசை நாட்களும் நீத்தார் நினைவு நாட்கள் என்றாலும், புரட்டாசி மாதத்தில் மாளயம் என்று அழைக்கப்படும்  பதினைந்து நாட்களும் , நம் முன்னோரை நினைத்தும், வழிபட்டும் அவர்களுக்கு நன்றி தெரிவிக்க மிகவும் உகந்த நாட்களாகக் கருதப்படுகிறது. இன்றைய நாளோடு முடிவடையும் இந்த மாளயத்தில் ஒரு பாடல் மூலம் நம் முன்னோர்களை வணங்கும் விதமாக ஒரு வெண்பா --இதனுடன் சென்ற ஆண்டுகளில் நான் எழுதிப்  பதித்த இரு சிறு பாடல்களையும் இணைத்து!

அன்புடன் 

ரமேஷ் 


ஈன்றதாய் தந்தையொடு முன்பிருந்த மூத்தாரின் 

மூன்று தலைமுறையைப் பேரிட்டு - நோன்பிருந்து 

எள்நீரை மட்டும் இறைத்துத் துதிக்காமல்   

உள்ளத்தில் ஏற்றிவைப்  போம் !

(இருவிகற்ப நேரிசை வெண்பா)


ஆலயம் சென்றேநாம் ஆண்டவனை வேண்டுதலின்

மாளயத் தன்றுநம் முன்னோரைக்  கும்பிட்டு 

எள்ளோடு நீர்சேர்த்து தர்ப்பணமாய் வார்ப்பதுவே 

சாலச் சிறந்த செயல்  

(பலவிகற்ப இன்னிசை வெண்பா)


தேகத்தைத் துறந்திட்டு மறைந்திட்ட முன்னோரின் 

தாகத்தைத் தீர்த்திடவே எள்நீரை அளிக்கும் நாள்; 

நாமளிக்கும் நெற்சோறை காகத்தின் வடிவத்தில் 

தாமதித்தல் ஏதுமின்றி வந்துண்டு வாழ்த்துவரே !

(கலிவிருத்தம்)

7 comments:

  1. நல்ல கவிதை . நன்றி

    ReplyDelete
  2. உள்ளங்கை நெல்லிக்கனி போல் கச்சிதமான அருமைக்கவிதை அன்பரே.

    ReplyDelete
  3. Very well said.Pithur kaaryam proceeds prayers to Almighty.Thank you,Ramesh.Let your poetic passion and expression inspire us for a long time to come.🙏

    ReplyDelete
  4. Your “kavithai” brings out the importance of pithru kaaryam and homage very succinctly. 🙏🙏🙏

    ReplyDelete
  5. Very thoughtful and moving

    ReplyDelete
  6. ஆடி அமாவாசை தை அமாவாசை புரட்டாசி அமாவாசை (மாஹாளயபச்ச) அமாவாசை இம்மூன்றுமே சிறந்தது என்றாலும் மாஹாளயபச்ச அமாவாசையில் மட்டும் தான் நம் முன்னோர்கள் நம்மிடம் வந்து ஆசீர்வதித்து செல்கிறார்கள் என்று குருக்கள் சொல்கிறார்கள்.தர்ப்பண கவிதை அழகு.

    ReplyDelete