குறள் மேல்வைப்பு வெண்பா - 25
கொங்கணவர் ஒரு சித்தர். போகரின் மாணாக்கர். இவர் பற்றிய கதை ஒன்று உண்டு. கொங்கணவர் ஒரு மரத்தின் கீழ் யோகம் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது மரத்தின் மேல் இருந்த கொக்கு அவர்மீது எச்சம் இட்டது. உடனேகொங்கணர் கண்ணை விழித்து அக்கொக்கை பார்த்தார். அது எரிந்து சாம்பலாயிற்று. அதன் பிறகு நீண்ட நாள் தவத்திலிருந்து விழித்தமையால் ஆகாரம் உண்ண ஊருக்குள் வந்து ஒரு வீட்டிற்கு சென்று உணவு கேட்டார். அது அந்த அம்மையார் கணவருக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்த நேரம். ஆதலால் அவர் பிச்சை கொண்டுவர சிறிது நேரமாயிற்று. நேரங்கடந்து பிச்சையிட வந்ததால் சினம் கொண்ட கொங்கணர், "என்னை இவ்வளவு காலம் காக்க வைத்தாயன்றோ? என்று கூறி கடுங்கோபத்தோடு விழித்துப் பார்த்தார். ஆனால் அந்த அம்மையார் உடனே எரிந்து சாம்பலாகிவிடவில்லை. இதுகண்டு கொங்கணவர் திகைப்புற்றார்! .உடனே அந்த அம்மையார் நகைத்து 'கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா!" என்று கூறினார். தான் காட்டில் செய்த செயல் இவ்வம்மையாருக்கு எவ்வாறு தெரிந்தது என்று வியந்து அவரின் கற்பின் வலிமையை உணர்ந்து மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.
"கொங்கணவா கொக்கென்று எண்ணினையோ என்னை"யெனத்
தங்கணவன் சேவையையே முன்வைத்தாள் - மங்கையிவள்.-
பெற்றான் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு
(பல விகற்ப இன்னிசை வெண்பா)
குறள்
பெற்றான் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு
பொருள்
கணவனைப் போற்றி கடமையைச் செய்யப் பெற்றால் , மகளிர் பெருஞ்சிறப்பையுடைய மேலுலக வாழ்வைப் பெறுவர்.
English version by Suththaanandha Bharatiyaar
Women who win their husbands' heart
Shall flourish where the gods resort.
great sir
ReplyDeleteNice . But not applicable for present day .
ReplyDeleteகொக்கு என்று நினைத்தாயோ என கூறி நகைச்சுவையாக
ReplyDeleteஏக்காளத்தாளா அல்லது கொங்கணவரின் ஆணவத்தை ஒடுக்க கற்பிதாளா என்பது தொக்கி நிற்கிறதே, கூறு கற்புக்கரசியே ?
வள்ளுவரே கற்பின் மேன்மையை மழையால் நிருபித்து விட்டு தவத்தால் கொக்கை எறிக்க வேண்டிய அவசியமில்லை.
ReplyDeleteNice 👍
ReplyDelete