இந்தப் பதிவிற்கு முன்னுரையும், விளக்கங்களும் தேவையில்லை!
அன்புடன்
ரமேஷ்
இறப்பில்லாமல் இருப்பது எப்படி?
புதைத்தால் ஆறடி எரித்தால் ஓர்பிடி
இதைத்தான் அடைவோம் இறுதியிலே
அதைத்தான் விதித்தான் ஆண்டவன் நமக்கு
அதனை மாற்றுதல் இயலாதே!
எதைத்தான் நம்முடன் எடுத்துச் செல்வோம்
எதுவும் நம்முடன் வருவதில்லை - (நாம்)
விதைக்கும் நற்செயல் விளைக்கும் பயன்மட்டும்
நிலைத்தே நம்பின் வாழ்ந்திருக்கும் !
முதுமூப் படைந்து உயிர்த்துளி உதிருமுன்
விதைகளை இன்றே ஊன்றிடுவோம்!
இதை நாம் செய்தால் மற்றவர் மனதினில்
இறப்பில் லாமல் வாழ்ந்திடலாம்!
அபயத்வம் (அச்சமற்ற வாழ்வு) என்பது அமரத்வம் (இறப்பின்மை) என்பதை விட சாலச்சிறந்தது எனும் பெரியோர் வாக்கை அழகான கவிதையாக தந்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!
ReplyDeleteமேலே எனது கருத்து. சிவா.
ReplyDeleteகண்ணதாசனை நினைவு படுத்துகிறார். கவிதை சிறப்பு.வாழ்த்துக்கள்.
ReplyDelete*படுத்துகிறாய்
ReplyDeleteSound faith sir
ReplyDelete