தக்காளியில் எக்காளம்
ஸ்பெயின் நாட்டில் உள்ள ஒரு கிராமத்தில் தக்காளிகளை ஒருவர் மேல் எறிந்தும், தக்காளிகளைப் பிழிந்தெடுத்த சாற்றில் ஒருவர் மேல் ஒருவர் விழுந்தும் ஒரு குதூகலக் கொண்டாட்டம் (???) நடைபெறுமாம்!
இது குறித்து, என் நண்பர் ஒருவர் படத்துடன் அனுப்பிய செய்தித் துணுக்கு இது! இந்தப் படத்தின் உந்துதலால் நான் எழுதிய ஒரு குறும்(புப்) பாடல்-வெண்பா வடிவில் !
அன்புடன்
ரமேஷ்
தக்காளிச் சேற்றினிலே முங்கிக் குளித்தபடி
எக்காளம் இட்டிடுவார் கட்டிப் பிடித்திட்டு
வெட்கிச் சிவக்கவில்லை கன்னியிவள் கன்னங்கள்
தக்காளிச் சாறுபட் டே .
(பலவிகற்ப இன்னிசை வெண்பா)
அந்த குறும்புத்தனை வசனமாக எடுத்து அனுப்பிய எனக்கு உடனடியாக கவிதையில் தொகுத்து கொடுத்த அவரின் ஆற்றலை மெச்சுகிரேன்.
ReplyDelete"தக்காளி ரசக் குளியல், விரசத்தில் முடிந்து விடுமோ" என்ற உங்கள் comment ஐ ( sent in e mail ) மிகவும் ரசித்தேன்!.
Deleteநல்லதொரு வெண்பா
ReplyDeleteகருத்துக்கு மிக்க நன்றி
Deleteநல்ல பதிவு .தொடரட்டும் தங்கள் கவிதை பயணம்
ReplyDeleteகருத்துக்கு மிக்க நன்றி
Deleteஎனக்கும் ஒன்று சொல்ல தோன்றுகிறது. அது மரபை மீறி விடும் என்ற அச்சம் என்னுள்ளே!
ReplyDeleteஇப்படி சொல்லாமல் விட்டால்தான், என்னென்னவோ நினைக்கத் தோன்றுகிறது!
Deleteசனி பிரதோஷத்தின் நீட்சியாக?
ReplyDeleteகுறும்பு!!
DeleteWhat a timely release sir!!!
ReplyDeleteThanks.
ReplyDelete