மழையும் கவிதையும் - ஒரு சுழற்சி
சில நாட்களுக்கு முன் பெங்களூரில் பனர்கட்டா அருகில் உள்ள ஒரு விடுமுறை ஓய்வகத்தில் தங்கி இருக்கையில் , வானில் மழைநீர் சுமந்து மிதக்கும் கருமுகில் கூட்டத்தைக் காணுகையில், மனதில் எழுந்த ஒரு பாடல்.
அன்புடன்
ரமேஷ்
கருத்த நிறத்தில் நீரைச் சுமந்து வானில் மிதக்கும் மேகங்கள்
கருவில் கருத்தை நிறைத்து வைத்து மனதில் மிதக்கும் எண்ணங்கள்
மலையை மேகம் தொடுகின்ற போததன் தேகம் குளிர்ந்து மழை பொழியும்
அலையும் எண்ணம் இதயம் தொடுகையில் எழுத்தோ டிணைந்து கவியாகும்
பொழியும் மழையால் நதிநீர் நிறைந்து கழனியில் பாய்ந்து வளம் செழிக்கும்
விழுமிய மொழிதனில் எழுதிய கவிதையைப் பழகியோர் மனங்களில் விழிப் பெழும்பும் .
நதிநீர் ஓடிக் கடலினுள் கலந்து கடல்நீர் மீண்டும் முகிலாகும்
அதுபோல் கவிதையும் கற்பவர் மனதினில் கருவாய் மறுபடி உருவாகும்
அருமையான சிந்தனை.
ReplyDeleteThanks for your appreciation. In feature please mention your name in the comments. Now it is shown as being from 'Annonymous"
DeleteReminds me of மேக சந்தேசம் by Kalidasa. May be yours is மேகசந்தேகம்.
ReplyDeleteI think Rain and thought are combined in Cloud computing !
Anyway we can call you now a காள மேக புலவர் !
While so I am studying life cycle assessment( LCA) of Batteries.!
As ususal you have come up with a 'punny" and apt comment! Long live your sense of humour.
Deleteநன்றி.
Deleteநகைச் சுவை என்பது தமிழ் நாட்டுக்கே உறிய "பண்"பாடு, என் Pun ன்னும் அதை சார்ந்ததே !!
அருமை . நன்றி
ReplyDeleteகவிஞரும் கற்பனையும்.....
ReplyDeleteThanks for your appreciation. In feature please mention your name in the comments. Now it is shown as being from 'Annonymous"
DeleteVery nice
ReplyDeleteThanks for your appreciation. In feature please mention your name in the comments. Now it is shown as being from 'Annonymous"
DeleteMagical memories expressed beautifully!
ReplyDeleteThanks for your appreciation. In feature please mention your name in the comments. Now it is shown as being from 'Annonymous".
DeleteVery nice! Reminds me of Khalil Ghibran!
ReplyDeleteHey, This is too much! one of the projects in my bucket list is to translate a few of his poems!
DeleteExcellent sir, pls write more like this
ReplyDeleteகருமேகமும் மழையும் அதனால் தோன்றிய எண்ணங்களுடன் அருமையான கவிதை. வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றிகல் பல, சங்கரலிங்கம்!
ReplyDelete