குறள் மேல்வைப்பு வெண்பா - 24
இரண்டு நாட்களுக்கு முன் இந்திய மங்கை வினீத் போகாத், பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான 50 கிலோ எடைப்பிரிவில் அரையிறுதிப் போட்டியில் தற்போதைய உலக சாம்பியனை வென்ற செய்தி அனைவரையும் மகிழ்ச்சியுறச் செய்தது. தங்கப் பதக்கத்தை அவர் தட்டிச் செல்வார் என்று அனைவரும் உறுதியாக நம்பினர். ஆனால் அடுத்த நாளே "அவர் எடை பரிசோதனையில் கேவலம் ஒரு 100 கிராம் அளவு மட்டும் 50 கிலோவை மிஞ்சியதால், போட்டியிலிருந்து விலக்கப்பட்டார்" என்ற செய்தி பேரிடியாக வந்தது.
இந்த செய்தி எனக்கு வலியறிதல் அதிகாரத்தில் வரும் ஒரு திருக்குறளை நினைவு படுத்தியது.
அதன் விளைவாக ஒரு குறள் மேல்வைப்பு வெண்பா!
அன்புடன்
ரமேஷ்
மயிரளவே கூடியதால் தங்கம் இழந்து
துயருற்றாள் தோகையாள் போகாத் - பயிற்பாடம்
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்
(இருவிகற்ப நேரிசை வெண்பா)
விளக்கம் : மென்மையான மயிலிறகு தான் என்றாலும், ஒரு சிறிய அளவுகூட, தாங்கும் அளவுக்கு மேல் ஏற்றினால், வண்டியின் அச்சு முறியும் . அதுபோலவே இங்கு 50 கிலோவுக்கு மேலே 100 கிராம் மட்டுமே அதிகம் என்றாலும், (0.2 சதவீதம்) போகாத் பதக்கத்தை இழக்க நேர்ந்தது!
அருமை . நல்ல பதிவு
ReplyDeleteநன்றி, SKM.
Deleteஒரே நாளில் துளியாக எடை ஏறினால் காரணம் தலை விதியாலா அல்லது கொஞ்சம் தலை கடத்தினால் என்று ஆராய்க!!
ReplyDeleteகனத்தினாலா**
ReplyDeletewell said sir
ReplyDeleteThanks, Friend.
Deleteஎனக்கு என்னமோ இக்குறள் போகாத்துக்கு பொருந்துமா என்பது கேள்வி.
ReplyDeleteபதிவு செய்த பின் பார்க்கும்போது , எனக்கும் அவ்வாறே சிறு சந்தேகம்!
Deleteஉண்மை அதுவெனில் நம் சங்கடம் சற்று மிகையே.சில விஷயங்களில் குறிப்பாக அறிவியலில் துல்லியம் மிகவும் அவசியமாகிறது.
ReplyDeleteIn my opinion, kural is meant for loading knowingly however in Vinitha case, it had happened because of their negligence.
ReplyDeletePoem is very good...
Thanks for the response, GRC.
DeleteAs usual excellent. Very good comparison. தங்க மெடல் பயந்ததோ தன்னை கங்கையில் வீசுவார் என்று.
ReplyDeleteபோகாத்தின் ஜந்தர் மந்திர் போராட்டத்தை நினைவுக்குக் கொண்டு வந்தீர்கள்!
DeleteAddendum to my above comments.
ReplyDeleteவில்வித்தை மாவீரன் ஆனான்.
பார் போற்றும் கொடை வள்ளலும் ஆனான்.
இப்புவியில் ஒப்பொண்ணா தோழனும் ஆனான்.
எனினும்
பாரதப்போர் வெற்றி திலகம் அறியான்.
ஆம். கர்ணன் அவன் சேர்க்கை தீதானதால்.
அடடே! இதை வைத்து ஒரு குறள் மேல்வைப்பு வெண்பா எழுதலாமே!
Delete