Search This Blog

Jul 8, 2024

மவுனப் பறவை ஓர் முட்டை இட்டது

 மவுனப் பறவை ஓர் முட்டை இட்டது 


மொழி எவ்வாறு தோன்றியது என்பது பற்றி ஒரு அதீதக் கற்பனை!

அன்புடன் 

ரமேஷ் 



யுகம் யுகமாக சகம்பல  வற்றிலும் 

-----தனித்தே தவித்த மவுனப் பறவையின் 

அகத்தில் விதையாய் விழுந்து அதன்பின் 

-----விருட்சமாய் விரிந்த எண்ணங்கள் எல்லாம் 


ஒலி-மொழி வார்த்தைகள் இல்லா ததனால் 

-----புகலவும் பகிரவும் இயலுதல் இன்றி

வெளியில் வராமல் புதைந்துள படியால் 

-----வலியால் வருந்தி வருடங்கள் சென்றபின் 



மவுனப் பறவை ஓர் முட்டை இட்டது 

கவனம் கவனமாய்க் காத்து வந்தது 

முட்டையின் சட்டைகள் உடைந்ததன் வெளியே 

குட்டிக் குஞ்சுகள் வந்தன ஒலியாய்!

ஒன்றாய்ச்  சேர்ந்த ஒலியின் துகள்கள் 

நன்றாய் இணைந்து பிறந்தன சொற்கள்!

சொற்களும் எண்ணமும் இணைந்தே எழுந்தது  

நற்றமிழ் மொழியும்   கவிதையும் கதையும்!  


 



19 comments:

  1. கற்பனை அருமை...உன் மொழி வழியால்.

    ReplyDelete
    Replies
    1. பாராட்டி வழி மொழிந்ததற்கு நன்றி!

      Delete
  2. Lovely 👍

    ReplyDelete
  3. "மொழி முதற் காரணமாம் அணுத்திரள் ஒலி எழுத்து " (நன்னூல் சூத்திரம்)

    ReplyDelete
  4. ரமேஷ், மேலே பதிவு நான், (சிவா.)

    ReplyDelete
    Replies
    1. வேறு யாராக இருக்க முடியும், சிவகுமாரைத் தவிர! நன்றி!

      Delete
  5. Exemplary imagination. Very nice.

    ReplyDelete
    Replies
    1. Thanks a Lot , Madhusudhan, for your appreciation.

      Delete
  6. Great imagination, nicely expressed

    ReplyDelete
  7. Thanks Sundar. How are you doing?

    ReplyDelete
  8. ஒரு முட்டாளுக்கும் விளங்கும் படியாக , ஒரு முட்டையை முன் வைத்தார், கற்பனைகளை எழுத்து வடிவில் அவிழ்த்து விட்டார். ஆஹா என்ன அற்புதம் !! எது முத‌லி‌ல்-முட்டயா அல்லது குஞ்சா என்ற சர்ச்சைக்கு இடம் கொடுக்காமல் இரண்டையும் பிணைந்து, ஒளி ஒலி என்று இணைத்து முத்தாய்ப்பு வைத்தார்.

    ReplyDelete
    Replies
    1. எப்போதும் போல் உங்கள் நகைச்சுவை ததும்பும் கருத்தை ரசித்தேன்!

      Delete
    2. மிக்க நன்றி. என் ந‌கைச்சுவைய் கண்டு நகை ஆடாமல் இருந்தால் சரி!

      Delete