பிரதோஷப் பாடல் - 48
நேற்றைய பிரதோஷ நாளன்று பெங்களூர் குந்தனஹல்லியில் இருக்கும் நாகலிங்கேஸ்வரர் ஆலயத்தில் ஆண்டவன் தரிசனம்! அங்கு மனதில் எழுந்த ஒரு பாடல்-
பிரதோஷ நாதன் திருவடிகளில் சமர்ப்பணம்.
அன்புடன்
ரமேஷ்
பிரதோஷப் பாடல் - 48
இமயப் பனிமலை மேலுறையும் இறைவனை
-----துதிக்கின்ற நாமமே ஓம்நமச் சிவாயவே
அமரரைக் காக்கவே ஆலகா லம்உண்ட
-----விமலனை வேண்டுவோம் ஓம்நமச் சிவாயவே
சமகருத் திரமெனும்* மந்திரங்கள் ஓதியே * சமகம், ருத்திரம் சிவனைத் துதிக்கும் மந்திரங்கள்
-----தினமவன் துதிபாடு வோம்நமச் சிவாயவே
சமயக் குறவர்கள் நால்வரும்* நாள்தொறும் *அப்பர், சுந்தரர்,மாணிக்கவாசகர்,சம்பந்தர்
-----நாவுரைத்த மந்திரம் ஓம்நமச் சிவாயவே
தமருகும் எனும்சிறு முரசினை ஏந்திய
-----நாதனைப் பாடுவோம் ஓம்நமச் சிவாயவே
உமையவள் நாதனை நான்மறை வேதனை* * வேதன் = இறைவன்
-----உருகியே வேண்டுவோம் ஓம்நமச் சிவாயவே
மிக மிக அருமையானது.
ReplyDeleteநன்றி
அர.
இராமச்சந்திர்ன்
Nice One
ReplyDeleteReally super sir
ReplyDeleteExcellent
ReplyDeleteஅருமை!பக்தி, பரவசம் கூட்டும் கவிதை!சிவன் எப்போதும் மனதில் நின்று, நன்மைகள் புரிந் திட, நாளும் பாடுவோம், நாதனின் பெருமைகளை!
ReplyDeleteExcellent! Where’s this temple?
ReplyDelete