Search This Blog

Jun 4, 2024

பிரதோஷப் பாடல் 47

பிரதோஷப்  பாடல் 47




அரியும் பிரமனும் அடிமுடி காண 

-----முடியா துயர்ந்த முன்னவனை 

சரிபாதி உடலில் உமையாளை இருத்தி 

-----பிரியா தவளோ டிருப்பவனை 

கரிதோ லுரித்து பிறிதத் தோலை 

-----மருங்கில்* அணிந்த மகேஸ்வரனை                        மருங்கு = இடை 

பிறவிப் பிணிகளை அறுத்திட வேண்டியிப் 

-----பிரதோஷ நாளில் போற்றிடுவோம்.


அன்புடன் 

ரமேஷ் 


  

4 comments:

  1. பக்திப் பரவசம்! கவிதை அருமை!தமிழின் பெருமை!வியக்கிறேன்!தங்களின் கவித்திறம் கண்டு!

    ReplyDelete
  2. ஓம் நமசிவாய. சிவாய நம ஓம்.

    ReplyDelete
  3. Super 👌

    ReplyDelete