இந்தப் பாடலுக்கு முன்னுரை தேவை இல்லை!
அன்புடன்
ரமேஷ்
முகங்கள்
உனக்கென்று ஓர் முகம் உறவுக்கு ஓர்முகம்
ஊராருக் கெனவேறு பலமுகம்
மனையாளுக் கொருமுகம் மக்கட்கு ஒருமுகம்
தனியாக ஒவ்வொருவர்க் கொருமுகம்
அனல்கக்கி தணல்வீசும் சினமுகம்
மகிழ்வோடு முறுவலிக்கும் மலர்முகம்
தனவானுக் கோர்முகம் தரித்திரர்க் கோர்முகம்
இனங்கண்டு கணப்பொழுதில் மாறும்.
கணக்கின்ற பலமுகம் ஊரார் உலகுக்கு
உருவாக்கி உலவவே விட்டேன்
எனக்கென்று என்னோடு ஜனித்திருந்த தனிமுகத்தை
எங்கயோ நான்தொலைத்து விட்டேன்
வெவ்வேறு தருணங்களில் வெவ்வேறு முகங்களை
அணிந்தே உலவுகிற தாலே
எவ்வா றிருக்கும் என்முகம் என்றே
என்றோ நான் மறந்து விட்டேன்
கனக்கின்ற மனதோடு கேட்கிறேன் அம்முகத்தை
கண்டவர் யாரேனும் உண்டோ?
அனுதாபம் என்மேல் கொண்டம் முகத்தை
அடையாளம் காட்டவே வேண்டும்!
அருமை!தொலைந்த முகத்தை மீண்டும் பெறலாம்!இது நாள் வரை கடந்து வந்த பாதையில் அதி வேகத்தில் பின்னோக்கிப் பயணித்தால்!
ReplyDeleteமுக நுணுக்கங்களை பல வரியில் பதித்து முகவரி தெரியாமல் எங்களை திணற
ReplyDeleteஅடித்து விட்டீர்கள்,
hello you win!
அருமை, அருமை நண்பா.வாழ்க , வளர்க உங்கள் கவிதை திறன்.
ReplyDeleteநன்றி.
அர.இராமச்சந்திரன்
Arumai.captured the psychology of changing moods/moments through the expressive masks.
ReplyDeleteWeldone
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
ReplyDelete