Search This Blog

Nov 9, 2023

சனாதனம்

சனாதனம்

சென்ற செப்டம்பர் மாதத்த்தில் சென்னையில்  "சனாதன ஒழிப்பு மகாநாடு" என்ற பெயரில் நடைபெற்ற ஒரு இந்துமத எதிர்ப்புக்  கூட்டம் , இங்கு மட்டுமன்றி நாடு முழவதும் ஒரு பேசுபொருளானது. தமிழக அரசின் மந்திரிகள் இருவரின் பங்கேற்போடு நடந்த இந்த கூட்டத்தில் சனாதனத்தை  அடியோடு ஒழிப்போம் என்று பிரகடனம் செய்தார் ஒரு அமைச்சர். இதன் விளைவாக நாடு முழுவதும் எழுந்த எதிர்ப்புக்குப்  பிறகு  ' நாங்கள் இந்து மதத்திற்கு எதிரிகள் இல்லை; சாதிப்  பிரிவுகளை ஒழிப்போம் என்றுதான் கூறினோம் " என்று ஒரு விளக்கம் வேறு! சாதிப்  பிரிவுகளையே  நம்பி அரசியல் செய்யும் கட்சிகளிடமிருந்து வரும் இந்த விளக்கம் ஒரு வேடிக்கை ! இந்து மதத்தினரை  கிள்ளுக்கீரையாக நினைக்கும் இவர்களுக்கு இந்துக்கள் எல்லோரும், சாதிப் பாகுபாடு இன்றி  இணைந்து, வரும் தேர்தல்களில் ஒரு பாடம் புகட்ட வேண்டும். மதச்சார்பின்மையை மதிக்கும் மற்ற மதத்தவர்களும் இதற்கு ஆதரவு தரவேண்டும்.

அன்புடன் 

ரமேஷ்       

 


ச(ன்)னா தனம்பற்றித் சற்றும்  புரியாமல் 

கன்னா பின்னாவென்று வன்சொற்கள் விட்டெறிந்த  

புண்ணாக்குப் பதரொத்த புன்நாக்குப்* பேர்களையே  

தன்மான இந்துக்கள் என்றைக்கும்  எப்போதும் 

மன்னிக்க மாட்டார்கள்;  ஒன்றாய்  ஒருங்கிணைந்து  

நன்றாக ஓர்பாடம் நிச்சயமாய்க் கற்பிப்பர் 

பின்னோடு வரும்தேர் தலில்  

 

*புன்நாக்குப் பேர்கள் = இழித்துப் பேசும் நாக்கை உடையவர்கள்  






5 comments:

  1. None of the fellows are qualified to speak on Sanathana Dharma. The sole aim is to wound the feelings of Hindus. People of TN have seen their true colours and will boot them out.

    ReplyDelete
  2. Hate speech. Why action not taken?

    ReplyDelete
    Replies
    1. பெரியவா சொல்றதெல்லாம் பெருமாள் சொல்றது போல. That's why!

      Delete
  3. சனாதனம் ஹிந்து மதத்துக்கு மட்டும் சொந்தமானது அல்ல. சத்யம், அஹிம்ஸா, அஸ்தேயம், அபரிக்ரஹம், ப்ரம்மசர்யம் ஆகிய பஞ்ச ஆதார தர்மங்களே சனாதனம் நிற்கும் தூண்கள். இவை எந்த காலத்துக்கும் எந்த மதத்துக்கும் பொருந்தும். இந்த அடிப்படை தத்துவத்தை சாமான்யர்களுக்கு புரியும் படி எடுத்துச்சொல்லாதது சமுதாயத்தின் அறிவுக்காவலர்களான பிராமணர்களின் gross dereliction of duty. இப்போது ஆளாளுக்கு வாய்க்கு வந்தபடி பேசுவது இதனால்தான்.

    ReplyDelete