நவராத்திரி - ஏழாம் நாள்
கருத்த உடலும் விரித்த தலையும்
-----சினத்தை சிந்தும் சிவந்த விழியும்
இரத்த பீஜனின்* இரத்தத் துளிகள்
-----சிறிதும் தரையில் சிந்தா வண்ணம்
உறிஞ்சி உதிரம் குடித்த இதழ்களும்
-----மின்னலை மாலையாய் அணிந்த கழுத்தும்
கருத்தபம்** மீது அமர்ந்து சமர்செ(ய்)ய
-----கூன்வாள்*** வச்சிரம்*** ஏந்திய கரங்களும்
கொண்டே இன்றைய ஏழாம் நாளில்
-----எழுந்து அருளும் கொற்றவைத் தாயை
வேண்டி வணங்கி அவளருள் பெறுவோம்;
-----கேட்கும் வரங்கள் கொடுப்பாள் அவளே!
* இரத்தபீஜன் என்னும் அரக்கன் அவன் தரையில் சிந்தும் ஒவ்வொரு துளி ரத்தமும் மீண்டும் ஓர் அரக்கனாக உருவெடுக்கும் என்ற வரத்தைப் பெற்றவன். அதனால் காளி அவனை வாதம் செய்த பிறகு ரத்தத்துளிகள் கீழே விழாமல் தன் இதழால் உறிஞ்சி உண்டாள் என்பது ஐதீகம்.
** கர்த்தபம் = கழுதை
*** கூன்வாள் = scimitar, cleaver வச்சிரம் = வஜ்ராயுதம்
No comments:
Post a Comment