நவராத்திரி - மூன்றாம் நாள்
திரிசூலம், செண்டு,வாள் கமண்டலங் களை
-----இடப்பக்கக் கைகளிலே ஏந்தி இருப்பாள்.
விரிகமலம், ஜபமாலை, வில்லம்புடன்
-----மணியொன்றைத் தாங்கிடுவாள் வலக்கரங்க ளில்
பரிவிரக்கம் கருணை காட்டும் வரதமுத்திரை
----- காட்டிடுவாள் அடியார்க்கோர் இடதுகரத் தால்
வருகின்ற அடியவரை அணைத்து அபயம்
-----தருகின்ற முத்திரையோர் வலக்கரத் திலே.
வரிப்புலியை அரியணையாய் அமைத்து அதன்மேல்
-----அமர்ந்து அருள் புரிந்திடுவாள் அனவரதமுமே
நெற்றியிலே சொலிக்கின்ற பிறைச் சந்திரன்- கூட
-----வெற்றியொலி எழுப்பிகின்ற காண்டா மணி
பெற்றதனால் சந்திரகண்டா என்னும்- பெயர்
----- கொண்டவளை நாள்மூன்றில் கொண்டா டிடுவோம்
No comments:
Post a Comment