நவராத்திரி- முதலாம் நாள்
இன்று நவராத்திரியின் முதலாம் நாள். இந்நாள் அன்று தேவியை சைலபுத்தரியாக வழி படுவர். திரிசூலம், தாமரை இவைகளை இரு கரங்களிலும் ஏந்தி,வெள்ளை நிற எருதின் மேல் அமர்ந்து, செம்மஞ்சள் நிற ஆடை அணிந்து அருள் புரியும் தேவியை வணங்கி இன்றைய நவராத்திரிப் பாடல்.
தேவியின் அருளால் வரும் எட்டு நாட்களிலும், அந்த அந்த நாட்களில் அவள் திருக்கோலம் பற்றி ஒவ்வோர் பாடல் எழுதிப் பதிக்க முயல்வேன்.
அன்புடன்
ரமேஷ்.
மலையரசன் மகளாக அவதரித்த தால்
சைலபுத்தி திரியென்று பெயர்கொண்ட வள்
திரிசூலம் ஒருகையில் விரிகமலம் மறுகையில்
தரித்தே திரிலோகம் காக்கின்ற வள்
வெண்ணெருதின் மேலேறி வீற்றிருப்ப வள்
தண்கருணை இருவிழியால் தருகின்றவள்
செம்மஞ்சள் நிறவாடை உடுத்திருப்ப வள்
கும்பிட்ட பேருக்கு அருள் செய்பவள்
ஒம்பதுநாள்* பண்டிகையின் முதல்நா ளிலே
நம்பியே அவள்தாளைத் தொழுதேத் துவோம்
*ஒன்பது நாள்
அருமை!எங்கிருந்தோ எழுந்து வந்த எண்ணங்கள்!
ReplyDeleteகவிதை வடிவில்!
கருத்தோவியமாக!
கற்பனைத் தேர் மீது!
நெஞ்சை அள்ளும்
இளமை காவியம்!
Super! Very beautiful description of Devi 🙏
ReplyDelete