Search This Blog

Sep 1, 2023

மௌன ராகம்


சென்ற வாரம் என் மூத்த மகனின் குடும்பத்தாருடன் மைன் (Maine) நகரத்தில் இருக்கும்  அகேடியா என்ற தேசியப் பூங்காவிற்குச் ( Acadia National Park)  சென்றிருந்தோம். அங்கு தங்கியிருந்து இயற்கையின் பலவேஅ று பரிமாணங்களை கண்டு ரசித்தோம். அவற்றுள் என்னை மிகவும் கவர்ந்தது , நாங்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்து கண்டு ரசித்த அமைதி நிரம்பிய  காலைக் காட்சிதான். எவற்றிலும் எவ்வித அசைவும் இன்றி, எங்கும் நிறைந்த மவுனம் என் மனதில் குடிகொண்டு எழுப்பிய மௌன ராகம் பற்றி ஒரு பாடல்!

அன்புடன் 

ரமேஷ்  







நிலத்தைக் குடைந்து நுழைந்த கடல்பரப்பில்*             * Bay, வளைகுடா                   

சலனங்களே சற்றும் இல்லா திருக்க

அலையேதும் இல்லாமல் கலையாத நீர்மேல் 

நிலையாக நிற்கின்ற உருநிழல்** பிம்பம்                         ** reflection                       


விரிகின்ற வானமதில் தெரிகின்ற நீலம் 

திரியாமல் அதில்மிதக்கும் வெண்மேகத் துகள்கள் 

வீசாத காற்று அதில் அசையாத இலைகள் 

பேசாத வார்த்தைகளில் கேட்காத ஒலிகள் 


விரியாத சிறகுகள் பறக்காத பறவை 

தெரியாத தோர்தொலைவில் தீபத்தின் துளிகள் 

எங்குநான் நோக்குமெப் பொருளிலும் நிறைந்து 

தங்கித் ததும்பி வழிகின்ற  மௌனம்


படர்ந்தெங்கும் பரவும் மவுனப்பெரு   வெளியில் 

எடையிழந்து தடையின்று மிதக்குமென் மனது. 

நிலையாது எப்போதும் அலைபாயும் மனதும் 

கலையாது இம்மவுனக் கடலில் அடங்கும்

 

மவுனப் பெருவெளியில் மிதக்குமென் தேகம்

என்காதில் எப்போதும் மௌனத்தின் ராகம் 




29 comments:

  1. Beautiful photos and lovely lyrics 🤩 Enjoy your stay 👍

    ReplyDelete
  2. Hi - that's from Aravind. Wonder why it says Anonymous ?!

    ReplyDelete
    Replies
    1. Thanks Aravind! I also do not know why it is showing anonymous. That is why I am requesting those commenting, to add their names in the comments. BTW, does my reply gets transmitted in the form of a mail or you have to read it through my blog?

      Delete
  3. Lovely. Hearing from you after long. Sunder

    ReplyDelete
    Replies
    1. Thanks Sundar! As you can see I am in USA and will return in November. Must Meet after I return. How are you doing?

      Delete
  4. Very nice and wonderful. Thank you very much for taking us for the atmosphere that you have enjoyed.
    RRamachandran

    ReplyDelete
  5. வீசாத காற்று அதில் அசையாத இலைகள்

    பேசாத வார்த்தைகளில் கேட்காத ஒலிகள்

    Super. Enjoy your stay. ஆங்கில பூமியில் தமிழ் கதிர்கள்.

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு மிக்க நன்றி, மது!

      Delete
  6. Very beautiful lines. I am transported to Maine while reading this. Reminds me of Wordsworth.

    ReplyDelete
    Replies
    1. Thanks a lot, Varadarajan, for your words of encouragement.

      Delete
  7. Wonderful lines Ramesh.

    ReplyDelete
  8. In such quiet and serene places, poetry gushes out without effort, particularly for an establishe writer like you Ramesh. Keep enjoying.

    ReplyDelete
    Replies
    1. Thank you Thiagu. Yes. The serenity of the location brought out this poem.

      Delete
  9. அசைந்தாடும் தென்றல் போன்று தமிழுக்கே தாலாட்டுப் பாடுவது போன்று, அனிச்ச மலரும் நாணும் அளவுக்கு மென்மையான வார்த்தைகளின் புன்னகை பூத்தும், பூக்காமலும், அருமை!அருமை!கவிதையின் மெல்லோட்டம்!
    வாழ்த்துகிறோம் கவிதை சொன்ன
    உங்களை, ரமேஷ் அவர்களே!ஆங்கிலம் பயின்ற உங்களுக்கு தமிழ் மீது இவ்வளவு பற்று!
    வியக்கிறோம்!
    மொழிகளுக்குள் பேதமில்லை!

    ReplyDelete
    Replies
    1. உன் பாராட்டு மடலே ஒரு கவிதை போல் உள்ளது! மிக்க நன்றி, நண்பனே! ஆனால் யாரிடமிருந்து வந்தது என்று தெரியவில்லை! கருத்து மடலில் உன் பெயரை இணைக்கவும்.

      Delete
  10. MPSwathanthira KumarSeptember 3, 2023 at 5:40 AM

    Beautiful place and lovely poem

    ReplyDelete
  11. You ‘took us’ to Acadia without us seeing the river , through your beautiful lines of poetry Ramesh!

    ReplyDelete
  12. Thanks Friend! Your message came through as 'from Annonymous". Can you kindly add your name in the comments so that I get to know the sender?

    ReplyDelete
  13. Great poem! You captured the serenity beautifully!
    Aditi

    ReplyDelete
  14. Love the description and poetry!

    ReplyDelete
    Replies
    1. Thanks a lot, friend. Your message came through as 'from Annonymous". Can you kindly add your name in the comments so that I get to know the sender?

      Delete
  15. Took me right back to Maine!

    ReplyDelete
  16. Well written.rrminds meof deep meditation.jay

    ReplyDelete