தேடல்
நதியின் தேடல் கடலில் முடியும்
கடலின் தேடல் கரையில் முடியும்
பகலின் தேடல் இரவில் முடியும்
இரவின் தேடல் பகலாய் விடியும்
கண்களின் தேடல் காட்சியாய் விரியும்
வண்டின் தேடல் மலரில் முடியும்
மலர்களின் தேடல் முடியும் இடமோ
சரமாய்ச் சூடிய மங்கையர் முடியே.
அம்பின் தேடல் இலக்கில் முடியும்
அன்பின் தேடல் உறவில் முடியும்
கல்லின் தேடல் சிலையாய் முடியும்
சொல்லின் தேடல் கவிதையில் முடியும்
ராகத்தின் தேடல் பாடலில் முடியும்
தேகத்தின் தேடல் மோகத்தில் முடியும்
மேகத்தின் தேடல் மழையில் முடிந்து
தாகம் தீர்க்கத் தரையில் இறங்கும்
தேடல் எவைக்கும் அவற்றின் முடிவில்
விடையும் ஒருநாள் கிடைத்திடும் ; ஆனால்
தேடுவ தெதையெனத் தெரியா தெதையோ*
தேடுமென் தேடற்கு விடையென்று கிடைக்கும்?
* தெரியாது எதையோ
தேடுதல் அருமை!
ReplyDeleteதெரிந்த பின் பெருமை!
கவிதையின் அருமை!
கருத்தினில் தெரியும்!
இத்தனை சிறப்புடன்
அமைந்த கவிதை
தந்தவர் நம்மவர்
என்பதில் பெரு மகிழ்ச்சி!
Excellent
ReplyDeleteகவிதையின் தேடல்கள் மிக அருமை
ReplyDeleteஅருமை நன்றி வணக்கம் வாழ்த்துகள் இனிய காலை வணக்கம்
ReplyDeleteVery nice poetically stated facts.
ReplyDeleteமிக அருமை
ReplyDeleteBeautiful lines.We are all in the same state. We don’t know what we are searching!
ReplyDelete