எழுவாய்- செயப்படு பொருள்- பயனிலை
இந்த மார்கழித் திங்களன்று அதிகாலையில் எழுந்து கண்ணனை வணங்கக் கூறும் ஒரு சிறு பாடல் - தமிழ் வாக்கிய வடிவமைப்பைக் குறிக்கும் சில வார்த்தைகளின் - (எழுவாய்- செயப்படு பொருள்- பயனிலை ) --சிலேடைப் பயன்பாட்டுடன் !
அன்புடன்
ரமேஷ்
எழுமின் திசை*யில் கதிரவன் எழுமுன்
எழுவாய் தினமுமிம் மார்கழி மாதம்.
குழுவாய்க் கோவில் சென்றே தொழுவாய்
குழலூ திடுவோன் கண்ணன் கழலை.
வியலகம்** வாழும் உயிர்நிலை அனைத்தும்
உயர்நிலை அடைய வணங்கித் ^^ துதித்தல்
செயப்படு(ம்) பொருளை பாடுதல் அன்றி
அயலுரை*** யேதும் பயனிலை, இலையே !
* எழுமின் திசை = கிழக்கு
** வியலகம் = பூமி
*** அயலுரை = பிற பேச்சுகள்
^^ துதித்தல் செயப்படு(ம்) பொருள் = துதிக்கப்படும் இறைவன்
Very simple and elegant poem for Margazhi month !
ReplyDeleteThe essence of Thiruppavai!
Ramani.
Very good advice 👍
ReplyDelete