Search This Blog

Dec 7, 2022

எனக்குப் பின்னால் என்னாகும்?

 எனக்குப் பின்னால் என்னாகும்?




 

படிப்பேன் என்று வாங்கிவைத்து 
-----புதிதாய் இன்னும் படிக்காமல் 
அடுக்கி வைத்த புத்தகங்கள் 
-----எனக்குப் பின்னல் என்னாகும்?

விரைவாய் ஒருமுறை எழுதியபின் 
-----வரைவு நிலையிலே காத்திருக்கும் 
பழுதைத்  திருத்தா எழுத்துக்கள் 
-----எனக்குப் பின்னல் என்னாகும்?

வேலை செய்யும் காலத்தில் 
-----வாங்கித் தெய்த்த வெளியாடை 
இணங்கும் வண்ண வடிவமைப்பில் 
-----அழகாய் அமைந்த கீழாடை 

துணிஅடுக்கிலே இடமடைக்கும்.    
------தூக்கி எறியென்றால்   மனம் துடிக்கும்- அக்  
கோட்டும் சூட்டும் கழுத்துப்பட்டையும்      
----- எனக்குப் பின்னல் என்னாகும்?

வெளிநாடு சென்ற வேளைகளில் 
------வாங்கிய அருங்கலைச்  சின்னங்கள்*          *curios  
நிறையடுக்குகளை நிறைக்கு மிவைகள்
------ எனக்குப் பின்னல் என்னாகும்?

ஒருக்கால்  வருநாள் உதவுமென      
------- பரணையில் திரட்டிய  பொருள்களையே   
ஒருநாளும்  நான்  எடுத்ததில்லை -- இவை 
-------எனக்குப் பின்னல் என்னாகும்?


இவ்வினாக் களுக்கெலாம்  விடைகிடைக்கலாம்        
-------விடையே தெரியாக் கேள்வியிதே !
ஒவ்வோர் நாளும் எனைநான் கேட்பேன்      
-------நானே என்பின் என்னாவேன்? 


அன்புடன் 

ரமேஷ் 




10 comments:

  1. மிக மிக அருமையானதும் உண்மையானதும்.

    ReplyDelete
  2. Lovely.This is the thought bothering me all the time. 👍

    ReplyDelete
  3. True . excellent . Every one's Questions but no one knows answer

    ReplyDelete
  4. Poornamatha poornamitham........I learned from one of your early posts that laid the foundation for my spiritual journey. If we realise that there is no birth and hence no death,என் பின் நான் என்னாவேன் என்ற கேள்விக்கே இடமேது. .அன்புடன் ராமசாமி

    ReplyDelete
  5. நானும் யோசிப்பேன்.., எனக்கு பின் என் புடவைகள் என்னாகும்? வாழும் காலம் தெரியாது வாங்கி குவிக்கின்றேனே.,மாயை அதில் மூழ்கி மயங்கி கிடக்கும் மனிதம்....

    ReplyDelete
  6. Food for thought dear Ramesh!
    Recently I read in some blog that after 70 years of age one should start disposing the things accumulated over the years.
    In most cases the children are settled abroad or living separately in India. Their tastes are different and their sentiments may not match ours. So better to dispose or donate the things to the neddy . Less luggage more comfort!

    ReplyDelete
  7. Very thoughtful poem and revealing also ! I liked the last words of the poem !
    Ramani.

    ReplyDelete
  8. True absolutely true.What will happen to all the books including ten volumes of Tamil Encyclopaedia after my time?

    ReplyDelete
  9. நல்ல சிந்தனை..நல்ல கவிதை.

    ReplyDelete