Search This Blog

Nov 23, 2022

ராமேஸ்வரம் கஃபே

ராமேஸ்வரம் கஃபே 

நானும் எனது குடியிருப்பில் இருக்கும் சில மூத்த குடிமக்களும் (senior citizens) இரண்டு நாட்களுக்கு முன் அருகிலிருக்கும் ராமேஸ்வரம் கஃபே விற்குச் சென்றிருந்தோம். அங்கு நாங்கள் உண்ட சுவைமிக்க சிற்றுண்டிகளைப் பாராட்டி ஒரு பாடல்!

அன்புடன் 

ரமேஷ் 

பி.கு : சில வருடங்களுக்கு முன் சென்னை ரத்னா கஃபே யின் இட்லி சாம்பார் பற்றிய ஒரு பாடலும் இத்தத்துடன் இலவச இணைப்பு! இட்லிப் பிரியர்களுக்கு சமர்ப்பணம்! 

 https://kanithottam.blogspot.com/2019/11/blog-post_18.html









வெள்ளை வெளேர் என்று வட்ட வடிவில் சுட்டு 
நல்நறும் நெய்யை அதன்மேல் நிறையவே  நன்றாய் ஊற்றி
செவ்வண்ணப் பொடியைத் தூவி தட்டி(லி)ட்ட இட்லியின்  
                                                                                          சுவையை
எவ்வண்ணம் எடுத்துரைப்பேன் ?  சொல்வண்ணம் 
                                                                            என்னிடமில்லை!




மொறுமொறுவென மேற்போர்வை போர்த்திட்ட மெதுவடையை
சிறுமிளகைச் சேர்த்திட்ட நறுமணநெய்ப் பொங்கலினை
உறுதுணையாய் அதற்கமைந்த  சாம்பாரைச்  சட்டினியை
ஒருமுறை உண்டதன்பின் மறுமுறையும்  வேண்டிடுமே!



வறுத்தெடுத்த  கொட்டையிலே பொடிசெய்து வடித்தெடுத்த
கருத்த நிறக்  குழம்பியிலே*  கொதிக்கின்ற பாலிட்டு
பொருத்த மாய்   அளவுடனே  சக்கரையைச் சேர்த்திட்டு
நுரைததும்பக் கோப்பையிலே குடித்திடுதல்  பேருவகை. 

*குழம்பி = decotion

15 comments:

  1. There is one close to my place in Indiranagar. Perhaps the first Rameshwaram to be set up.
    Always crowded. Next time try ‘ I to D’ in Indiranagar. Excellent South Indian hotel with emphasis on Karnataka dishes.

    ReplyDelete
    Replies
    1. Yes. I understand that there are three branches in Bangaluru. Will try I to D when I get a chance.

      Delete
  2. ருசியான சாப்பாட்டால் வயிறு நிரம்பியதால் பிறந்த நல்லதொரு கவிதை. பெங்களூரு இருப்பிடமா?

    ReplyDelete
    Replies
    1. வயிறு நிரைந்தால் மகிழ்சிக் கவிதை! பட்டினி கிடந்தால் சோகக் கவிதை! எப்படியும் ஒரு கவிதை உண்டு!
      சென்ற சில மாதங்களாக பெங்களூரில்!

      Delete
  3. Very nice, but when did you sift to Bangalore?

    ReplyDelete
    Replies
    1. Thanks. Am in Bangalore for the past few months,

      Delete
  4. Super! I have eaten in the JO Nagar branch.. plethora of delicacies!
    You should forward it to owners of Rameshwaram....

    ReplyDelete
  5. Dear Ramesh,
    Pl ref to my preceding msg. The name of the hotel in Indiranagar is “IDC” and NOT
    ‘ I to D’.
    My mistake. Sorry.

    ReplyDelete
  6. நாக்கில் எச்சில் ஊற வைத்து விட்டாயப்பா!

    ReplyDelete
  7. திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதியை தரிசிக்கிறோமோ இல்லையோ ரத்னா கேப் இட்லி சாம்பாருக்காக
    ஓடிவிடுவோம். Forgetting the ambience.

    ReplyDelete
  8. Ramesh, You are tempting me to visit Bangalore to taste the nice dishes . Ramani , Chennai.

    ReplyDelete
  9. Super fantastic excellent bale - both Rameswaram cafe and your poem :)

    ReplyDelete
  10. Nice.tried to go to one nesr orion mall.too crowded snd no parking space

    ReplyDelete