Search This Blog

Dec 27, 2022

கடலோரக் காட்சி

 

கடலோரக் காட்சி 

நண்பர் அரவிந்த் பகிர்ந்து கொண்ட படம். அது பற்றி ஒரு பாடல்.

இப்பாடலுக்கு விளக்கம் தேவையில்லை.

அன்புடன் 

ரமேஷ் 





அரவம் இன்றி இரவின் மடியில் 

-----இன்னும் உறங்கும் நகரங்கள் 

இருளைப் பிளந்து கண்கள் சிமிட்டும் 

-----தெரு ஓரத்து மின்மினிகள் 

சிறிதே வெளுத்து சாம்பல் நிறத்தில்

-----சிற்றலை ததும்பும் சமுத்திரங்கள் 

அருணன் வரவை மறைக்கும் சிறுதிரை 

-----அரைச் சாம்பல்நிற மேகங்கள் 

பிறிதோர் காலை அரும்புமித் தருணம் 

-----செந்நிறச் சாயலில் ஒளிர்வானம் 

பரிதியின் கதிர்முழு வான்நிறைக்  கும்வரை  

-----மேலே மிதக்கும் மேகங்கள் 

தரிசனம் செய்ய இக்காட்சியின் அழகை 

-----இவ்விரு கண்கள் போதாதே  

14 comments:

  1. Wonderful poetry. Nice choice of works exactly describing the sunrise. My congratulations. Keep it up.

    ReplyDelete
  2. கற்பனை அருமை! கவிதை அருமை!! வாழ்க கவிஞர் ரமேஷ்!!!

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் பல, நண்பரே! உங்கள் பெயர் தெரியவில்லையே! Annonymus என்றே குறிப்பிடப்பட்டுள்ளது!

      Delete
    2. இவன் பெரியநாயகம்- திருச்சி - நண்பர் கவிஞர் ரமேஷ் அவர்களே!

      Delete
  3. சிறப்பு. ”அருணனின் வரவை மறைக்கும் சிறுதிரை” என்பதில் னி என்பதைத் தவிர்க்கலாம். பாட்டின் ஓசை கூடும்.

    ReplyDelete
    Replies
    1. ஆம்! செய்துவிட்டேன்! பாராட்டுக்கு நன்றி,

      Delete
  4. You are able to see a poetry in everything. Great. Choice of words brilliant. Just one comment - பரிதியின் கதிர்முழு வான்நிறைக்கும் வரை - can you think of a change here to align the osai nayam with all other lines? Something like Parithiyin kathirmuzhu vaanmarai varaiyil???

    ReplyDelete
    Replies
    1. Thanks NK. "பரிதியின் கதிர்முழு வான்நிறைக் கும்வரை"என்று பிரித்துப் படிக்கவேண்டும்! இப்போது சையாக வரும்!

      Delete
  5. The latest anonymous is NK

    ReplyDelete
  6. The real poet is one who can portray what others feel but can not express ! You are a great poet. You just reflect whatever we experience and want to convey !!
    Great Ramesh ! Lee up the good work. Ramani .

    ReplyDelete
    Replies
    1. Many, Mnay Thanks for your glowing tribute, Ramani!

      Delete
  7. Thanks a lot. Will help if you add your name along with the comment!

    ReplyDelete