வீணாய்ப் போன வருடங்கள்
2020 , 2021 - இரண்டு ஆண்டுகளும் கொரானா-வுக்கு பயந்தே கழிந்தன.
2022 லும் இந்நிலை தொடரும் போலவே தெரிகிறதே!
மனித சமுதாயத்திற்கு விடிவு காலம் எப்போது?
வருத்தத்துடன்
ரமேஷ்
வீணாய்ப் போன வருடங்கள்
இருபத் திருபதும்* இருபத் தொன்றும்** வீணாய்ப் போன வருடங்கள் *2020 **2021
சிறுநுண் மிதனின் சீற்றத் தாலே திருடப் பட்ட தருணங்கள்
இன்றோ நாளையோ நீங்கிடும் என்று எதிர்பார்த் திருந்த நாழிகைகள்
நன்றே நடக்கும் நாளை என்று நம்பிக் கடந்த நாட்துளிகள்
வானினை நோக்கி வரங்கள் வேண்டி துதித்துக் கழித்த வாரங்கள்
தீனுண் மியுடைய தாக்கம் தீருமென் றெதிர்பாத்த திருந்த மாதங்கள்
இருபத் திருபதும் இருபத் தொன்றும் வீணாய்ப் போன வருடங்கள்
சிறுநுண் மிதனின் சீற்றத் தாலே திருடப் பட்ட தருணங்கள்
வருடம் இரண்டை வாழ்க்கையி லிருந்து வாரிக் கொடுத்து விட்ட பின்னும்
பொறுமை காத்துப் பொறுமை காத்து பல்லுயிர்ப் பெருவிலை தந்தபின்னும்
தூமக் கோளொன்று வானினை விடுத்து பூமியின் மீது விழுந்ததுபோல்
வாமனக் கிருமி வேறோர் வடிவில் ஓமிக் ரானாய் வருகிறதே! - இதன்
ரௌத்திரம் சற்றும் குறையா திருந்து வருத்திடும் வருடங்கள் தொடர்ந்திடுமோ
சரித்திரம் மீண்டும் இருபத் திரண்டில் மற்றோர் முறையாய்த் திரும்பிடுமோ?
நல்ல படைப்பு . விரைவில் இந்த கிரிமி தொல்லைக்கு முடிவு வரும்
ReplyDeleteபாராட்டுக்கும், விரைவில் இத்தொல்லை நீங்கிவிடும் என்ற நம்பிக்கைக்கும் நன்றி.
DeleteSir
DeleteSiblings of Omicron has already announced their arrival, anticipating a refusal poem from you !!! shortly.
Let us hope for the better tomorrow?.
கிருமியினால் இருமி தன்னிலை தடுமாறி எழுதப்பட்ட அருவியை அள்ளி பருகினோம்.
ReplyDeleteபள்ளிக்கு செல்லமுடியாமலும் வீட்டிலும் தள்ளி வைத்திறுக்கும் தங்கள் அருமை சிறுமிகளை கண்டு பரிதாபம் கொண்டீரோ.
என்று தணியும் இந்த கொறானாவின் கொடுமை!
பின் குறிப்பு:
ரொவ்த்ரம் என்ற வட மொழிக்கு பதிலாக வீர்யம் என்ற சொல் பொருந்தும் என நினைக்கிறேன்!
இன்னும் கொஞ்சம் முயன்றால் நீரே ஒரு முழுக் கவிதையை எழுதிவிடலாமே!
Deleteவீரியம் என்ற சொல் மிகப் பொருத்தம்! நன்றி!
என்று தணியும் இந்த கொரானா தாக்கம்.
ReplyDeleteரமேஷ், உன் கவிதை மிக அருமை...என் பிதற்றலை பொறுத்துக் கொள்ளவும். தக்க
நன்றி, ராம்கி!
Deleteதக்க*எப்படி வந்தது என்று தெரியவில்லை.
ReplyDeleteநல்லதொரு கவிதை.இத்தீதுண்மி மீண்டும் உருமாறாமல் ஒழிய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.ஆண்டவன் அருள் புரியட்டும்.
ReplyDeleteஅங்கனமே ஆகுக! ஆமென்!
DeleteYour anguish is very well brought out. Let's pray and hope that the world is back to normal at the earliest!
ReplyDeleteThanks. The road seeems long and dark as many more mutations are being predicted, Anyway, hope for the best.
Delete