Search This Blog

Dec 16, 2021

சாதனையாளர்கள்

சாதனையாளர்கள் 

இரண்டு நாட்கள் முன்பு உலக அளவில் சாதனை புரிந்த இரு இந்தியப் பெண்கள் இவர்கள்!

இவர்களுக்கு கிடைத்த பாராட்டுகளிலும் , பரிசுகளிலும்  எவ்வளவு வித்தியாசம்!

என் நண்பர் முரளிதரன் எங்கள் வாட்ஸப் குழுவில் பகிர்ந்து கொண்ட ஆதங்கத்தின் தூண்டுதலில் எழுந்த பாடல் இது 

அன்புடன் 

ரமேஷ்   


சாதனையாளர்கள் 

தேதி - 14-12-2021


ஹர்னாஸ் சந்து - பிரபஞ்ச அழகிப் போட்டியில் முதலிடம்  

நீனா குப்தா - கணித மேதை ராமானுஜம் பரிசு 



 

இந்திய மங்கையர் இருவர் இந்நாள் 

தத்தம் துறையினில் சாதனை செய்தார்.

அழகுப் போட்டியில் வென்றார் ஒருவர் 

அறிவுப் போட்டியில் வென்றார் ஒருவர் 

முந்தையர் முதலிடம் பெற்ற செய்திகள்

முதலாம் பக்கச் செய்தியாய் மிளிர 

பின்னவர் பெற்ற பதக்கச் செய்தி 

பின்னொரு பக்கம் புதைக்கப் பட்டதே!                                                                                                                                                                     

அழகுப் போட்டியில் வென்ற  வருக்கோ 

ஆயிர மாயிரம் பாராட்டு களாம்!

அறிவுப் போட்டியில் முதலிடம் பெற்றால் 

வருமோ இத்தகு வாழ்த்துகள் எல்லாம் ?


எண்கணி தத்தில் ஏற்றம் கண்டு 

எவர்க்கும் இயலா தேற்றத் தீர்வை 

கண்டு பிடித்த காரிகை இவரை 

வந்து அடைந்த புகழ்மிகக் குறைவே!


முப்பன் னிரண்டு மேலும் கீழும் 

இருபன் னிரண்டோ  இடையின் அளவு!

இந்தக் கணிதம் மட்டும் அறிந்தோர் 

எண்கணி தத்தை எங்கனம் அறிவார்?


பளிச்சென மின்னும் வெளிப்புற அழகை 

மட்டும் மதித்து மற்றவை மறந்தார்!

உள்ளொளிர் திறமையை மதித்துப் போற்றும் 

காலம் வருமெனக் காத்துக் கிடப்போம்!








 



9 comments:

  1. Very nice Ramesh. I like your choice of words and the imagination which went into choosing this comparison of two achievers.

    ReplyDelete
    Replies
    1. Thanks, Thiagu. But, as I have stated , the idea was driven by a post by my friend in a whatsapp group.

      Delete
  2. சிறப்பான அகவற்பா. உலகில் அழகிற்கு முன்னால் அறிவைக் கொண்டு வருவாரோ?

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி, இராம.கி.

      Delete
  3. Yes Ramesh sir, nowadays people give importance to external beauty, but not for the intelligence as well as inner beauty.

    ReplyDelete
  4. முப்பன்னிரெண்டையும்,இப்பன்னிரெண்டையும் மார்கழி மாதத்தில் கவிதையில் கொண்டு வர ஒரு "இது" வேண்டும் நண்பா.கவிதை அழகு.

    ReplyDelete
    Replies
    1. 36-24-36 என்ற கணக்கைப் புரிந்து கொண்டு பாராட்டியமைக்கு நன்றி! 🤩

      Delete
  5. I understand your anguish.Unfortunately glitter and glitz only steal the limelight these days!

    ReplyDelete
  6. Bitter truth has been told through beautiful lines. very nice Ramesh.

    ReplyDelete