Search This Blog

Nov 30, 2021

திருமெய்யம்

திருமெய்யம் 

என் நண்பர்கள் அரவிந்த் மற்றும் இராம.கிருட்டிணன் அவர்கள் இருவரும்  வாட்சப்பில்  அப்பில் பகிர்ந்து கொண்ட ஒர் புகைப்படம் கீழே!.

திருமெய்யம்  என்னும் ஊரில் அமைந்த ஒரு கோட்டையில் உள்ள கோவில் இது.

கோவிலில் பள்ளிகொண்ட கோலத்தில் உள்ள மெய்யப்பரோடு அவர் பின்னாலே காணப்படும் பிரம்மா , மற்ற தேவர்கள், முனிவர்கள் ஆகியோரின் வடிவங்கள் கொண்ட கர்பகிருகம்  முழுதும் மலையிலே செதுக்கப்பட்ட ஒரு சிற்பக்கலை  அதிசயம்!

கோவில் சிலைகள் எல்லாம் திருடப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு வரும் இன்றைய நாட்களில், இப்படிப்பட்ட சிற்பங்களை திருடி விற்கவே முடியாது! 

ஒருவேளை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் மூதாதையர் சிலைத்திருட்டைத் தவிர்க்க மிகுந்த முற்போக்கு நோக்கோடு இப்படிச் செய்தார்களோ?

இந்த சிற்பக்கலை அதிசயத்தைப் பற்றி ஒரு  பாடல். 

அன்புடன் 

ரமேஷ் 


சிற்பக்கலை விற்பன்னர் கற்பனையிலே உதித்து
கற்சுவரில் உயிர்பெற்ற தெய்வத்திரு உருவங்கள்!
கர்பக் கிரஹ மானாலும் கடவுளரின் கற்சிலையை
அற்பர்சிலர் களவாடி கடல்தாண்டி வெளிநாட்டில்
விற்பதையே தடைசெய்யவழிதேடி அந்நாளே
கற்சுவரில் செதுக்கினரோ முற்போக்குப் பார்வையுடன்?




3 comments:

  1. அன்பு நண்பா
    முன் யோசனையால் அனேக சிற்பங்கள் பாதுகாப்பு பட்டு வருகின்றன. உம் கவிதையாலும் இவற்றை வெளி கொண்டு வந்தமைக்கு உமக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள்.
    பி.கு. இராமகிருஷ்ணன் என்று நான் என் பெயரை குறிப்பிடும்போது நீவிர் இராமகிருட்டிணன் என்று குறிப்பிடுவதிலிருந்து உன் தமிழுக்கு தலை வணங்குகிறேன்.

    ReplyDelete