Search This Blog

Aug 8, 2021

ஈட்டி எரிதலில் ஈட்டிய பதக்கம்

ஈட்டி எரியும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவைப் பாராட்டி ஒரு சிறு பாடல்!

அன்புடன் 

ரமேஷ் 


ஈட்டி எரிதலில் ஈட்டிய பதக்கம் 

 

ஈட்டி எரியும் களத்தில் - எவரும் 

-----ஈடில் லாத வகையில் 

போட்டி போட்டு வென்று - ஒளிரும் 

-----தங்கப் பதக்க மொன்றை 

ஈட்டி எமக்குத் தந்தாய் - எங்கள் 

-----நெஞ்சை நிமிர வைத்தாய் 

நாட்டு மக்கள் சேர்ந்து - உனக்கு 

-----  நன்றி கோடி சொல்வோம்!


நூறு ஆண்டுக் காலம்- பாரத 

----நாட்டைச் சேர்ந்த மக்கள் 

யாரும் செய்ய இயலா -  தொரு 

-----செயலைச் செய்து  வென்றாய் 

பார தத் தாயின் -புகழை 

-----பாரில் பரவச் செய்த 

நீரஜ் சோப் ராவே - நீயும் 

-----நூறு ஆண்டு வாழ்க!

 

20 comments:

  1. Very timely. Ramesh you are becoming an expert poet who seems to dream and live poetry.

    ReplyDelete
    Replies
    1. Well, Nothing else to do! I try to write something on the current events - நிகழ்வுகள். Hope you enjoy these !

      Delete
  2. ஈட்டி எரிவது எப்படி என
    காட்டி கொடுத்து உலக புகழை
    எட்டிபிடுத்து பாட்டியாலாவிர்க்கு
    திரும்பும் நாட்டின் மகனே - வருக

    ReplyDelete
    Replies
    1. ஆகா! ஒரிஜினலையே மிஞ்சுகிறதே!

      Delete
  3. ஈட்டி எறிந்து நாட்டின் தலையை நிமிர வைத்த நீரஜே உன் புகழ் சரித்திரத்தில் பொறிக்கப்படும்.

    ReplyDelete
  4. நன்றி, நண்பா!

    ReplyDelete
  5. Inspired by you

    போட்டிதனிலே ஈட்டி எறிய அறிந்தாய் அதை எறிந்தாய் 
    நாட்டிற்கெனவே தங்கமெடலை  ஈட்டினாய் புகழ் நாட்டினாய் 
    சார்ந்த மக்கள் உள்ளத்தை தீட்டினாய் வழி காட்டினாய் 
    சோர்ந்த எங்கள் ஆர்வத்தை கூட்டினாய் உயிர் ஊட்டினாய்

    ReplyDelete
    Replies
    1. அருமை! அருமை! மிகச் சிறப்பான படைப்பு!

      Delete
  6. You have been quick out of the blocks yourself. Kudos.

    ReplyDelete
  7. சுடச்சுட தங்க மகனுக்கு அருமையானதொரு பாராட்டுக்கவிதை.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. Very nicely written. For a country starved of Olympic medals Neeraj is a beacon of light ! Let’s hope he follows up with more successes.

    ReplyDelete