Search This Blog

Aug 6, 2021

எழுதாத முதல் வரிகள்

விடிந்தும் விடியாத , உறக்கம் முற்றும் கலையாத, இளங்காலைப் பொழுது ஒரு கவிஞனுக்கு மிகவும் ஆக்கவளம் மிக்க நேரம். ஆனாலும் சில சமயங்களில் மனதின் எழும் கற்பனைகளுக்கு முழுதாக சொல்வடிவம் கொடுக்கும் முன்னாலேயே பொழுது விடிந்து விடிகிறது. பாடல் நிறைவு பெறுவதில்லை!

அத்தகைய ஒரு நிகழ்வு பற்றிய பாடல் இது!

அன்புடன் 

ரமேஷ் 


 எழுதாத முதல் வரிகள் 



முழுதாக முடியாத பின்னிரவுப் பொழுதுக்கும் 

-----விடியல்வே ளைக்கும் இடையே 

விழிமூடிப்  படுக்கையில் இருக்கையில் மனதிலே 

-----மிதந்து வந்த வரிகள்!   

எழுதாத என்பாடல் ஒன்றிலே அவைகள் 

-----இரண்டாம்  மூன்றாம் வரிகளாம்  

விழிக்குமுன் பாடலின் முதல்வரியும் உதிக்குமென 

-----கண்மூடிக் காத்திருந் தேன்! 


பொழுதோடு வாராமல் முதலாம் வரியதுவோ  

-----வழுக்கியே ஓடுகிற தே! 

எழுந்த பின்னாலும்  எவ்வேலை செய்தாலும் 

------அவ்வேலை யில்லென் மனம் 

முழுதாகச் செல்லாமல் முதலாம் வரியதைத்

-----தேடியே அலைகின்றதே!

வழிபடும் அறையிலே  இறைவனின் முன்னாலே 

-----அமர்ந்திருக் கும்போதி லும் 

கழிவறை  சென்றாலும்  குளிக்கவே போனாலும்

-----உறுத்தலால் மனம் உழலுதே! 

அழகான வரியொன்று இதுகாறும் வாராமல் 

-----இழுபறியாய் இருக்கின்றதே!


பொழுதோடு இன்றுநான் உறங்கச் செல்லுவேன்,

-----கண்விழித்துப் பின் எழுகையில்  

சுழியோடி கடல்மூழ்கி எழும்போது அவன்கையில் 

-----ஒளிரும்நன் முத்தினைப் போல்  

பிழையொன்றும் இல்லாத அழகான முதல்வரியும்

------என் பாட்டில் வந்து விழுமோ ? 

பழுதொன்றும் இல்லாது   என்பாட லும்நிறைந்து  

----- முழுதாகி அழகு  பெறுமோ?



    


24 comments:

  1. Ramesh, I appreciate your creativity! You have created a beautiful poem even on the unwritten first line !
    I have observed such creativity only with writer Sujatha. No words to describe the beauty with natural events of the day.
    Ramani ( RVR)

    ReplyDelete
    Replies
    1. Ramani, Thanks for your encouraging words. I try be creative and succeed once in a while! Ha,Ha! But Sujahtha?? ஏணி வெச்சாலும் எட்டாது!

      Delete
  2. Great work. Excellent lines. Sometimes you even forget the lines that you had thought about early in the morning!

    ReplyDelete
    Replies
    1. Yes. I have experienced this predicament also. If I recall had written a poem on this a couple of years back!

      Delete
  3. Excellent . முதல் வரி வரவில்லை என்றால் என்ன நல்ல கவிதை தந்திருக்கிறிர்கள் . வாழ்த்துக்கள் . தொடரட்டும் தங்கள் பயணம்

    ReplyDelete
  4. Very imaginative and reflecting something that happens to all of us whether it is prose or poetry.

    ReplyDelete
    Replies
    1. Yes. It sometimes happens that we get the tune of a popular song in our head but struggle to get the lyrics!

      Delete
  5. முதல் வரி விடி காலயில் வராவிட்டால் பரவாயில்லை- காலம் சென்ற கலைஞர் போல் ஓர்ரிரவு இரவல் வாங்கி எழுதி இருக்கலாமே!

    ReplyDelete
  6. It happens to most of us sometimes. The thought process abruptly left incomplete in the sleep. Happens to me while solving crossword puzzles!

    ReplyDelete
  7. Replies
    1. Thanks Ramki. I thrive on your continuous encouragement.

      Delete
  8. The concept the range of imagination and the lazy elegance of the semi sleepy state is well contexted.
    Superb.

    ReplyDelete
    Replies
    1. Very Poetic comment! You have a way with words!Thanks for the appreciation.

      Delete
  9. V.ரமேஷ் எனும் இளம் கவிஞனைக் கண்டு மனம் மகிழ்கிறேன். பொறியாளர் கவிஞராகவும் முடியும் என நிரூபித்துள்ளீர்கள். நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.என் பாடலும் நிறைந்து அழகு பெறுமோ? தங்கள் ஏக்கத்தை வெளிப்படுத்தியிருப்பது அருமை!- அருள்பிரகாசம்

    ReplyDelete
  10. பாராட்டுக்கு மிக்க நன்றி, அருள்! (நீங்கள் என்னுடன் SPIC ல் பணிபுரிந்த அருள்பிரகாசம் தானே?)

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் நினைப்பது மிக சரியே.St. Joseph College ல் தங்களைப் பார்த்தேன். Available in whatsapp +91 9003296069.

      Delete
  11. இறுதியில் கிடைத்ததா வரிகள்?

    ReplyDelete
  12. இறுதியில் வரிகள் கிடைத்தனவா ரமேஷ்?

    ReplyDelete