நட்பின் எல்லை
கனவின் எல்லை எது வரை ?
காலையில் விழித்து எழும்வரை.
நினைவின் எல்லை எது வரை?
நித்திரை நம்மைத் தொடும்வரை.
ஒளியின் எல்லை எது வரை?
கண்கள் மூடும் அதுவரை
நட்பின் எல்லை எது வரை? - யாரும்
கண்டது இல்லை இதுவரை.
வித்தையின் எல்லை எது வரை - அதன்
உத்திகள் வெளியில் வரும் வரை
கத்தியின் எல்லை எது வரை? அதன்
கூர்முனை கேடயம் தொடும்வரை
புத்தியின் எல்லை எது வரை ? இறுதி
புத்தகப் பக்கம் அதுவரை
நட்பின் எல்லை எது வரை?- யாரும்
கண்டது இல்லை இதுவரை.
பொன்புகழ் பதவி பொருளைத் தேடி
ஓடி ஓய்ந்தவிவ் வேளையில்
அற்றை நாட்களில் பெற்ற நண்பர்கள்
உறுதுணை என்ற உணர்வுடன்
உறங்கிக் கிடக்கும் நட்பு இழைகளை
சேர்த்துக் கோர்த்துப் பின்னியே
உறவுப் பாலம் ஒன்றை அமைத்து
சிறந்த நட்பைப் போற்றுவோம்.
பிறவிப் பயனை எய்துவோம்.
சிறப்பு.
ReplyDeleteVery well written Ramesh
ReplyDeleteExcellent.Ramesh,It takes me to my school days.
ReplyDeleteWell written about friendship.
ReplyDeleteCongrats Ramesh.
Greatness of friendship!
People value friendship more than
worship in times of need!
ரமேஷ்,
ReplyDeleteஅருமையான உணர்ச்சி ததும்பும் கவிதை.
அருமையான கவிதை மேஷ்.👌👌
ReplyDelete